போச்சு.. எல்லாம் போச்சு.. ஒரே நாளில் தன் மீதான மதிப்பை சுக்குநூறாக உடைத்த மோகன் வைத்யா!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 5: Promo 2: தர்ஷன்னை திட்டிய மோகன், புரியவைக்கும் பாத்திமா- வீடியோ

சென்னை: தனது கோபத்தால் மக்களிடம் பெற்ற நன்மதிப்பையும் மரியாதையையும் ஒரே நாளில் இழந்துவிட்டார் மோகன் வைத்யா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மோகன் வைத்யாவின் வாழ்க்கை பெரும் சோகங்களால் நிறைந்துள்ளது. தனக்கென இருக்கும் ஒரே சொந்தம் தனது மகன்தான். அந்த மகனுக்கும் வாய் பேச முடியாது காது கேளாது என கூறியிருந்தார்.

தன்னுடைய கஷ்டங்களை கூட கேட்க ஆள் இல்லை, சொல்லி அழக்கூட ஆள் இல்லை என்று வேதனைப்பட்டார் மோகன் வைத்யா. மேலும் அவரது மனைவியின் இறப்பு குறித்தும் அவர் பேசியது ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களையும் கண்ணீர் விட வைத்தது.

ஆதரவு

ஆதரவு

இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் தாண்டி மக்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார் என மோகன் வைத்யா மீது இரக்கம் கொண்டனர் மக்கள். மேலும் கவலை படாதீர்கள், நாங்கள் இருக்கிறோம் என்றும் கூறி ஆதரவு ஆறுதலும் தெரிவித்தனர்.

சப்போர்ட் அதிகரிப்பு

சப்போர்ட் அதிகரிப்பு

விஜய் டிவியில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடை பார்த்த பின்னர் மோகன் வைத்யாவுக்கான ஃபேன்ஸ் எண்ணிக்கை அதிகமானது. டிவிட்டரிலும் அவருக்கான சப்போர்ட் அதிகரித்தது தெரிந்தது.

முகத்தை காட்டிய மோகன்

முகத்தை காட்டிய மோகன்

இந்நிலையில் தர்ஷனிடம் அவர முகத்தைக் காட்டியது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு யாருமே இல்லை என்று மோகன் வைத்தியா அழுதபோது என்னை உங்கள் மகன் போல் நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி ஆறுதல் கூறியவர் தர்ஷன்.

குறைத்துக்கொண்டார்

குறைத்துக்கொண்டார்

அப்படி கூறிய தர்ஷனை இன்று என்னை அப்பா என்று கூப்பிடாதே என்ற ஒற்றை வார்த்தையால் நொறுக்கிவிட்டார். அவர் பேசியது ஹவுஸ் மேட்ஸை மட்டும் கவலையடைய செய்யவில்லை ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் தான்..! தனது கோபத்தால் ஒரே நாளில் மதிப்பையும் மரியாதையும் குறைத்துக்கொண்டார் மோகன் வைத்யா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X