இந்த கேப்டனும் அப்படிதான் போல.. கண்டபடி திட்டும் கவினை கண்டுக்காம மீராவிடம் எகிறும் மோகன் வைத்யா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டின் கேப்டனான மோகன் வைத்யா ஒரு சார்பாக நடந்துகொள்வது பார்வையாளர்களை கடுப்பாக்கியுள்ளது.
பிக்பாஸ் வீட்டின் மூத்த உறுப்பினராக உள்ளார் மோகன் வைத்யா. கடந்த வாரம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என கூறி தனது சொந்தக் கதையை கூறினார் மோகன் வைத்யா.
அவரது கதையை கேட்டப்பின்பு அவர் மீது ரசிகர்களிடையே மதிப்பு அதிகரித்தது. ஆனால் மறு நாளே சாண்டி மற்றும் சரவணனிடம் கோபித்துக்கொண்டார் மோகன் வைத்யா. அப்போது மன்னிப்பு கேட்டு அவரை நார்மலாக்கினார் சாண்டி.

காயப்படுத்தும் மோகன்
இதைத்தொடர்ந்து அப்பா என கூப்பிட்ட தர்ஷனை என்னை அப்பா என கூப்பிடாதே என்று கூறி காயப்படுத்தி அழ வைத்தார். புரமோவில் மட்டுமே அந்த காட்சிகள் காட்டப்பட்டன.

மறைமுகமாக ஒன்று
பின்னர் டிரெஸ் ஹுக் போட சொன்ன மீரா குறித்து வனிதாவிடம் கூறி சண்டையை உருவாக்கினார். எல்லோரிடமும் முகத்துக்கு நேராக ஒன்றும் மறைமுகமாக ஒன்றும் பேசி வருகிறார்.

வெட்ட வெளிச்சமானது
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகியுள்ள மோகன் வைத்யா, வனிதா போல ஒரு சார்பாக தான் நடந்து வருகிறார். நேற்றே அது பிரதிபலித்த நிலையில் இன்றைய புரமோவில் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஆர்க்யூமென்ட்
அதாவது ரூல்ஸ் படி நடக்கவில்லை என கவின், மீரா மிதுனை திட்டுகிறார். இருவருக்கும் இடையில் இதனால் ஆர்க்யூமென்ட் நடக்கிறது.

கவினை கண்டிக்காமல்
அப்போது கவின், அறிவில்ல, போய் ரூல்ஸ படி என்கிறார். இதற்கு தவறாக எந்த வார்த்தையும் பயன்படுத்தாமல் பதிலளிக்கிறார் மீரா. ஆனால் இதனை கேட்ட மோகன் வைத்யா, கவினை கண்டிக்காமல் மீராவை அமைதியாக இருக்கும்படி கூறி அதட்டுகிறார்.

வயசுக்கு மரியாதை கொடு
ஆனால் மீரா மீண்டும் பேசுவதால், வயசுக்கு மரியாதை கொடு என கத்துகிறார் மோகன் வைத்யா. ஏற்கனவே மோகன் வைத்யா அடிக்கடி கோபப்படும் மோகன் வைத்யா தற்போது, வனிதா, கவின் கேங்குடன் சேர்ந்து கொண்டு பார்ஷியலாக மீராவிடம் எகிறுகிறார். இதனால் பார்வையாளர்கள் கடுப்படைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











