பிக்பாஸ் வீட்டுக்கு புது கேப்டன்.. இன்னும் என்னலாம் நடக்கபோகுதோ?
சென்னை: பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாக மோகன் வைத்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே பல பிரச்சனைகளை பிக்பாஸ் வீடு சந்தித்துவிட்டது.
முதல்வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக வனிதா விஜயக்குமார் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். வனிதா ஒரு சார்பாகவே நடந்துக்கொண்டார்.

தனக்கென ஒரு கேங்க் ஃபார்ம் செய்துக்கொண்டு மீராவை பாடாய் படுத்தினார். இந்நிலையில் நேற்றுமுதல் பிக்பாஸ் வீட்டிற்கு புதிய கேப்டன் வந்துள்ளார்.
வீட்டின் மூத்த ஹவுஸ் மேட்டான மோகன் வைத்யா புதிய கேப்டனாகியுள்ளார். மோகன் வைத்யா சட்டென கோபப்பட்டு வருகிறார்.
கடந்த வாரம் சாண்டி மற்றும் சரவணனுடன் கோபம், தர்ஷனை அப்பா எனக்கூப்பிடாத என்றுக்கூறி காயப்படுத்தியது என பல சர்ச்சைகளில் சிக்கினார். இந்நிலையில் அவர்தான் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் வாரத்திற்கான கேப்டனாகியுள்ளார்.
இதனால் இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் என்னன்ன நடக்கப்போகுதோ என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











