வேந்தர் டிவியில் தொகுப்பாளினியான மோனிகா
வானிலை அறிவிப்பாளராக டிவியில் அறிமுகமாக சினிமா, சீரியல் என வலம் வந்தவர் மோனிகா.
திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனபின்னர் மீடியாவிற்கு சின்ன இடை வெளிவிட்டிருந்த மோனிகா தெய்வம் தந்த வீடு சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
தற்போது மீண்டும் புதிதாக தொடங்கியுள்ள வேந்தர் டிவியில் குழந்தைகளின் நிகழ்ச்சிச் தொகுப்பாராக களம் இறங்கியுள்ளார்.

சீரியல் வாய்ப்பு
2008-ல் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதல் தொடர் ‘காமெடி காலனி', அடுத்து ‘செந்தூரப்பூவே' இப்போது ‘தெய்வம் தந்த வீடு' சீரியல் நடிப்பும் ஒரு திரில்லான அனுபவமாகப் போகிறது என்கிறார்.

வேந்தர் டிவியில்
சீரியலில் நடிப்பதோடு வேந்தர் தொலைக்காட்சியில் ‘சா பூ த்ரீ' என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை நடத்த தொடங்கியிருக்கேன். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பழைய தொகுப்பாளினி மோனிகாவாக வலம் வரத்தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொகுப்பாளினி மோனிகா
தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்தாலும் நான் இன்னும் ஒரு தொகுப்பாளினிதான். ரசிகர்களும் என்னை தொகுப்பாளினி மோனிகாவாகத்தான் பார்க்கிறார்கள் என்கிறார்.

நிகழ்ச்சியின் ராணி
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினி ஆகியிருப்பது இழந்தை மீண்டும் பெற்றது மாதிரி இருக்கிறது. நானும் ஒரு தாயாகிவிட்ட சூழ்நிலையில் குழந்தைகள் நிகழ்ச்சி நடத்த கிடைத்த வாய்ப்பு இறைவன் கொடுத்தது என்கிறார் மோனிகா.


Click it and Unblock the Notifications











