ரம்யா பாண்டியன் மாதிரி.. ஒற்றை வேட்டி கட்டி.. கிறங்கடிக்கும் மோனிஷா

சென்னை: ஒற்றை வேட்டியை கட்டிக்கொண்டு ரம்யா பாண்டியன் பாணியை கையிலெடுத்த அரண்மனைக்கிளி மோனிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியல் மூலமாக பிரபலமான மோனிஷா அந்த சீரியலில் ஜானு கேரக்டரில் தமிழ் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார் .

இப்ப வரைக்கும் பல சீரியல் ரசிகர்கள் இந்த சீரியலை ரொம்பவே மிஸ் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். இந்த சீரியல் மறுபடி ஒளிபரப்பப்பட மாட்டார்களா என்றுதான் பல்வேறு ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்

அரண்மனைக் கிளி சீரியல்

அரண்மனைக் கிளி சீரியல்

அந்த அளவிற்கு இந்த சீரியல் மூலமாக மோனிஷா ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய சாந்தமான முகத்தை ரசித்து வந்த ரசிகர்கள் அவர் இல்லாததால் ஏங்கிப் போய் இருக்கின்றனர். தற்போது அரண்மனைக்கிளி சீரியல் இரண்டாம் பாகமாக காற்றுக்கென்ன வேலி என்னும் பெயரில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இந்த சீரியலின் ரசிகர்கள்தான் இவரை தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

குத்துவிளக்கு

குத்துவிளக்கு

இதுவரைக்கும் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்துக் கொண்டிருந்த இவர் தற்போது நடத்தியிருக்கும் போட்டோ ஷூட்டை பார்த்து இவரா என்று பலர் குழம்பிப் போய் இருக்கின்றனர் .அவரது சொந்த மாநிலமான கேரள மாநிலத்தில் பாரம்பரிய உடை அணிந்து ரசிகர்களை பாடாய் படுத்தி எடுக்கும் வகையில் ஃபோட்டோஷூட்டை எடுத்திருக்கிறார்.

கேரளத்து முண்டு கட்டி

கேரளத்து முண்டு கட்டி

ஏற்கனவே இந்த மாதிரி ரம்யா பாண்டியன் கேரள பாரம்பரியப்படி வேஷ்டியை முழுசாக உடம்பில் சுற்றி போட்டோ எடுத்து பிரபலம் அடைந்து விட்டார் .அதே பாணியை தற்போது இவரும் தனது பாரம்பரிய நடனத்துடன் எடுத்திருக்கிறார் .இந்த வீடியோக்களை தற்போது அவருடைய இன்ஸ்டாகிராமில் அவர் பதி விட்டதும் அவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி தீர்த்து வருகின்றனர் .

தரிசனம்

தரிசனம்

மோனிஷாவுக்கு சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் மோனிஷாவின் பெயரில் பல ஃபேன்ஸ் பேஜ்களை ஓபன் பண்ணி வைத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஃபேன்ஸ் பேஜ்களிலும் தற்போது மோனிஷாவின் லேட்டஸ்ட் வீடியோக்கள் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது.

கண்ணால் கவிதை

கண்ணால் கவிதை

தற்போது இவரை இந்த சீரியலில் காணாமல் தவித்துக்கொண்டிருந்த இவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவருடைய தரிசனத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போய் இருக்கிறார்கள். அதுவும் மகளிர் தின ஸ்பெஷலாக பாரம்பரிய உடையிலும் பாரம்பரிய நடனத்தோடு கண்களாலே கவிதைகள் பேசும் இவரை உருகி உருகி ரசித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .

திரும்ப வாங்களேன்

திரும்ப வாங்களேன்

மீண்டும் இவர் தமிழ் சீரியலில் நடிக்க மாட்டாரா என இவருடைய ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கு அவர் நல்ல கதை வந்தால் கண்டிப்பாக மீண்டும் கிளம்பி வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். இவர் கல்லூரியில் கூட படித்த நண்பரே காதலித்து திருமணம் செய்து கொண்டதால் கேரளாவில் கணவரின் வீட்டில் வாழ்ந்து வந்தவர் .

வாங்க சீக்கிரம்

வாங்க சீக்கிரம்

தற்போது இந்த சீரியலுக்காக தான் சென்னை வந்து நடித்துக் கொண்டிருந்தார் .ஆனால் இப்போது இந்த சீரியலும் இல்லை என்பதால் மீண்டும் சொந்த ஊரிலேயே இருந்து வருகிறார் .அதனால்தான் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் கேரளத்தின் பசுமையும் வளமையும் ரசிகர்களுக்கும் கண்களுக்கு அளித்து வருகிறார். என்ன சொல்லுங்க கேரளா கேரளாதாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X