மிராண்டாவின் மூன்று முடிச்சு!

By Mayura Akilan

Asin
கமல்ஹாசன் நாயகனாக நடிக்க, வில்லனாக ரஜினிகாந்த் நடிக்க, நாயகியாக ஸ்ரீதேவி நடிக்க கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பெரும் சூப்பர் ஹிட் ஆன மூன்று முடிச்சு படத்தின் பாடல் வரியை வைத்து ஒரு விளம்பரத்தை உருவாக்கி கலக்கியுள்ளது மிராண்டா நிறுவனம்.

இந்த விளம்பரத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். டிவிகளில் இந்த விளம்பரம் இப்போது ஹிட்டாகியுள்ளது.

கே.பாலச்சந்தரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றுதான் கருப்பு வெள்ளையில் பரபரப்பாக ஓடிய மூன்று முடிச்சு. இப்படத்தின் அட்டகாசமான பாடல்களில் ஒன்று வசந்த கால நதிகளிலே.. ரஜினி படகோட்ட, கமலும், ஸ்ரீதேவியும் ரொமான்ஸ் செய்தபடி பயணிக்க, ஒரு கட்டத்தில் ரஜினி படகை உலுக்கி கமல்ஹாசனை தண்ணீரில் தள்ள, நீச்சல் தெரியாத கமல், தணணீரில் மூழ்கி இறந்து போவார்.

இந்தப் பாடல் வரிகளையும், காட்சியையும் மையப்படுத்தி படு ஜாலியான ஒரு கமர்ஷியலாக உருவாக்கியுள்ளது மிராண்டா. அதில் ஸ்ரீதேவி வேடத்தில் ஆசின் நடிக்கிறார். படகின் நடுவில் அவர் உட்கார்ந்திருந்த கமல் கேரக்டரில் வரும் நபர் மவுத் ஆர்கன் வாசித்தபடி வருகிறார். அப்போது கையில் மிராண்டா பாட்டிலை எடுத்து ஆசினுக்குக் கொடுத்துக் குடிக்கிறார். அப்போது ரஜினி வேடத்தில் வரும் நபர் படகை உலுக்க கமல் வேடத்தில் வந்தவர் தண்ணீரில் விழுகிறார்.

இதைப் பார்த்து ஆசின் பெரிதாக குழம்பவில்லை. மாறாக, ரஜினி வேடத்தில் வருபவர் தன்னிடம் இருக்கும் இன்னொரு டைப் மிராண்டா பாட்டிலை எடுத்துத் தர அதை ஜாலியாக வாங்கி வாயில் வைக்கிறார் ஆசின். அப்போது உற்சாக மிகுதியில் எழுந்து நின்று அவர் ஆட படகு ஆட, ரஜினி வேடத்தில் வந்தவரும் தண்ணீரில் விழுகிறார்.

இப்படி இருவரும் அடுத்தடுத்து விழுந்தாலும் சற்றும் கவலைப்படாத ஆசின், தன்னிடமிருக்கும் மிராண்டா பாட்டில்களுடன் பயணத்தைத் தொடருகிறார். ஆனால் தண்ணீரில் விழுந்த கமலும், ரஜினியும் படகைப் பிடித்தபடி மேலே வர அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு மிராண்டாவைக் கொடுக்கிறார் ஜாலி ஆசின்.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் 2 மிராண்டா குளிர்பானங்களுக்கான விளம்பரம் இது. இப்போது டிவிகளில் இதுதான் பாப்புலராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் காட்சியை விளம்பரத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக உரியவர்களிடம் முறையாக அனுமதி வாங்கித்தான் பின்னர் படப்பிடிப்பை வைத்தார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X