நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணம்.. மூன்று முடிச்சு!

By Mayura Akilan

நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அழகுற சித்தரிக்கும் தொடர் மூன்று முடிச்சு.

கட்டுப்பாடான ஒழுக்கம், எதிர் காலத்தில் கணவன் வீட்டில் அடங்கி வாழ வேண்டிய போதனை இவற்றுடன் வாழ்கிறாள். அவள் தந்தையையும் தந்தை தன் மகளையும் உயிருக்குயிராய் நேசிக்கின்றனர்.

சீமாவிற்கு திருமணம்

சீமாவிற்கு திருமணம்

வீட்டில் சீமாவுக்கும் பிரேமுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்கிறது. வீட்டிற்குத் தெரியாமல் ஆடல் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு சுற்றாக முன்னேறிக் கொண்டிருக்கும் சீமாவுக்கு வெற்றி இன்னும் சில சுற்றுகளில் காத்திருக்கிறது.

நடனத்தில் வெற்றி நிச்சயம்

நடனத்தில் வெற்றி நிச்சயம்

வீட்டிற்குத் தெரியாமல் எவ்வளவு நாளைக்குத்தான் மறைப்பது என்கிற தவிப்பில் சீமாவும்... சீமா ஆடினால் நிச்சயம் வெற்றிபெறுவார் அத்துடன் தங்களது நிகழ்ச்சி நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடையும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒரு பக்கம் சீமாவைத் துரத்துகின்றனர்.

சீமாவின் வெற்றிக்கு வழி

சீமாவின் வெற்றிக்கு வழி

ஒரு சாதனையாளர் நம் வீட்டில் உருவாவது தெரியாமலே சீமாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை அவரது பெற்றோர் நிராகரிக்கின்றனர்.

சீமா குடும்பத்தினருக்குப் பயந்து இதுவரை பெற்ற வெற்றிகளையும் தியாகம் செய்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடப்போகிறாரா..? என்பது விறுவிறுப்பாக சொல்லப்பட்டது.

நடனமாட வற்புறுத்தும் ஏஜென்ட்

நடனமாட வற்புறுத்தும் ஏஜென்ட்

இது ஒருபுறம் இருக்க கருணா மகன் சந்தீப் சசியின் கல்யாண வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. சசி ஒரு பார் டான்சர் என்பதால் அவளுடைய ஏஜென்ட் சந்திரா பணக்காரணான அப்துல்பாய் என்பவரிடம் நடனமாட வற்புறுத்துகிறான். அதற்கான உடையும், சி.டியும் கொடுத்து அவளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறான்.

சந்தேகப்படும் தோழிகள்

சந்தேகப்படும் தோழிகள்

கல்லூரியில் படிக்கும் ரோகினியின் தங்கை சீமா கல்யாணத்திற்காக வந்திருக்கும் அவள், ஏஜென்ட் சந்திரா சிடி கொடுக்கும் போது பார்த்து விடுகிறாள். ரோஹினியும், சீமாவும் சந்தேகம் அடைகின்றனர். உண்மை என்ன என்பதை கண்டறியும் வேலையில் இறங்குகின்றனர். இந்தவாரம் விறுவிறுப்பாக போகிறது மூன்று முடிச்சு தொடர்.

விறுவிறுப்பான திருப்பங்கள்

விறுவிறுப்பான திருப்பங்கள்

வாழ்க்கையில் அவளது கனவுகளுக்கும் கட்டுப்பாடான வளர்ப்பு முறைக்கும் இடையே அவள் எதிர்கொள்ளும் சவால்களுடன் சுவையான திருப்பங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது மூன்று முடிச்சு. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகிறது மூன்று முடிச்சு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X