Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 2 hrs ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- Automobiles
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- News
மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்
- Lifestyle
இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Thenmozhi BA Serial: லட்சுமி ஸ்டார்ட் ஆயிரு.. ரஜினி மாதிரி பேரு வைக்கலியா ஹீரோ சார்?
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் எதாவது ஒரு படத்தோட காட்சியை உல்டா பண்ணி திணிக்கறதுல கில்லாடியா இருக்காங்க சீரியல் குழுவினர். கண்ணுக்கு தெரிஞ்சே முத்து, அரசு படத்தோட காட்சியை உல்டா பண்ணி இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ...
அதிருக்கட்டும், இன்னிக்கு ராத்திரி எபிசோடுல படிக்காதவன் படத்தில் ரஜினி சார், தன்னோட காருக்கு லட்சுமின்னு பேர் வச்சு, செல்லமா கூப்பிடுவார் பாருங்க. அதே மாதிரி கண்ணம்மா நாம் ஓட்டும் வாகனத்துக்கும் பேர் வைக்கணும் சார்னு புருஷனுக்கு சொல்லித் தர்றா.
நாய்க்கு பேரை வச்சீங்களே சோறை வச்சீங்களான்னு கேட்கற மாதிரி, வண்டிக்கு பெட்ரோல் ஊத்தறீங்களே.. அதுக்கு ஒரு பேரை வச்சீங்களா ஹீரோ சார்னு கேட்கிறாள் தேன்மொழி. இன்றைய காலக்கட்டத்தில் பைக் வச்சு வைத்திருக்கும் பலரும் பைக்கை நேசிக்கறாங்க. இன்னும் அதுக்கு ஒரு பேர் வச்சுக்கறதில்லை... இதுதான் உண்மை.

டாக்சி டிரைவர் ரஜினி
படிக்காதவன் படத்தில் ரஜினி டாக்சி டிரைவரா இருப்பார். தன்னோட டாக்சிக்கு லட்சுமின்னு பேர் வச்சு ஆசையா கூப்பிடுவார். லட்சுமி ரொம்ப விவரம் வேற.. பொய் சொன்னால் பிடிக்காது...கெட்டது செய்தால் பிடிக்காது. நடிகை அம்பிகா இதில் பிள்ளைத்தாச்சி மாதிரி வயித்தில் பாட்டில் கட்டிக்கிட்டு, ஊரை ஏமாத்தி சாராயம் விற்பாங்க. அவங்க வந்து ரஜினி டாக்சியில் ஏற, அதுக்குத்தான் கெட்டது செய்தல் பிடிக்காதே.. அது ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்ணும்..

நிறை மாத கர்ப்பிணி
லட்சுமி.. நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை லட்சுமி. பாவம் புள்ளைத்தாச்சி.. இன்னிக்கோ நாளைக்கோ..நீ இப்படி ஸ்டார்ட் ஆகாம மக்கர் பன்றேன்னு டாக்சி கூட பேசிக்கிட்டே பேச்சு கொடுக்கும் போது கல்யாணமாகி சொல்ற மாசத்துக்கும், வயித்துல பிள்ளை உண்டாகி இருக்கும் மாசத்துக்கும் சம்பந்தமே இல்லாம அம்பிகா சொல்ல, அடுத்த நாள் நாள் பிரசவம்.. அடுத்த நாள் மறுபடியும் பிள்ளைத்தாச்சி என்று செம காமெடியில் படம் இருக்கும்.

ஹீரோ சார் உதைக்காதீங்க
அருள் பைக் பாதியில் நின்றதில் கடுப்பாகி, பைக்கை உதைக்கிறான். அப்போது அங்கு தனது ஸ்கூட்டியில் வந்த தேன்மொழி, ஹீரோ சார் அவனை ஏன் உதைக்கறீங்க என்று கேட்கிறாள். வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதுன்னு சொல்றான். ஹீரோ சார், வண்டிக்கு பெட்ரோல் ஊத்தறீங்களே அதுக்கு ஒரு பேர் வச்சீங்களான்னு கேட்கிறாள். இவன் பேசாமல் நிற்க, சார் பைக்கை லவ் பண்ணனும் சார். இப்போ பாருங்க என் ஸ்கூட்டிக்கு நான் கண்ணம்மான்னு பேர் வச்சு இருக்கேன். தினமும் காலையில் எழுந்து கண்ணம்மாகிட்டே ஐ லவ் யூ சொல்லுவேன்.

நன்றி சொல்லுவேன்
பத்திரமா ஊராட்சி மன்ற ஆஃபீஸுக்கு அழைச்சுட்டு வந்ததுக்கு நன்றி கண்ணம்மான்னு சொல்லுவேன். இப்படி நாம எதை எல்லாம் பயன்படுத்தறோமோ அதை நேசிக்கணும் ஹீரோ சார்னு தேன்மொழி சொல்றா. இப்போ வீட்டுக்கு போகணும், நடு வழியில நிக்குதேன்னு புலம்பறான் அருளு. வீட்டுக்குத்தானே போகணும்.. வாங்க நம்ம வண்டியில போகலாம்னு கூப்பிடறா. இப்படி படத்திலிருந்து சுட்டாலும், சுவையா சீனை குடுத்து இருக்காங்க.