ரசனையாய் பேசி நிகழ்ச்சியை ரசிக்கத் தூண்டும் டிவி தொகுப்பாளர்கள்...

By Mayura Akilan

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. தூர்தர்சன் காலம் தொடங்கி இன்றைக்கு பல்கிப் பெருகியுள்ள பல சேனல்களை வரை தொகுப்பாளினிகளோ, தொகுப்பாளர்களோ இல்லாமல் நிகழ்ச்சிகள் இருப்பதில்லை. தங்களின் வசீகரமான பேச்சினாலும், ரசிக்கும் படியான உடை அமைப்பினாலும், நேயர்களை கவர்ந்து நிகழ்ச்சியை பார்க்கத் தூண்டுகின்றனர்.

ஒரு நிகழ்ச்சியை நேயர்கள் பார்ப்பதும் பார்க்காமல் போவதும் அந்த தொகுப்பாளரின் கையில்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் போரடித்துப் போய் வேறு சேனலுக்குத் தாவி விடுவார்கள். ஒபரா வின்ஸ்ப்ரேவின் டாக் ஷோ பிரபலமானதற்கு அவரின் ரசனையான பேச்சு மிக முக்கியமான காரணம்.

இன்றைக்கு எத்தனையோ நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இருந்தாலும் ஒருசிலரால் மட்டுமே சிறப்பாக சிறப்பாக தொகுத்து வழங்க முடிகிறது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள சில தொகுப்பாளினிகளை பட்டியலிட்டுள்ளோம்.

ஸ்மார்ட் திவ்யதர்ஷினி

ஸ்மார்ட் திவ்யதர்ஷினி

விஜய் டிவியில் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்' நிகழ்ச்சியில் துறு துறு வென்று விளையாட்டுக்களை நடத்தி நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டு செல்கிறார் திவ்யதர்ஷினி. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் திவ்யதர்ஷினி ரசிகர்களால் டிடி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மட்டுமல்ல சிறந்த நாட்டியக்கலைஞர். ‘விசில்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பன்முகக் கலைஞர் பிரியதர்ஷினி

பன்முகக் கலைஞர் பிரியதர்ஷினி

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக உள்ள பிரியதர்ஷினி, நாடகக் கலைஞர், நாட்டியக் கலைஞர், தமிழ் திரைப்பட நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் 'விழுதுகள்' நெடுந்தொடரில் தன் கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், ‘கோலங்கள்', 'ரேகா ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்குகிறார்.

நடன நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் ரம்யா

நடன நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் ரம்யா

நடனநிகழ்ச்சியில் போட்டியாளர்கள்தான் சுவாரஸ்யம். அந்த நிகழ்ச்சியின் சுவை மாறாமல் தொகுத்து வழங்கும் ரம்யாவின் சிரிப்பு ரசிகர்களுக்கு கூடுதல் சுவாரஸ்யம். அழகான உச்சரிப்பு மூலம் விஜய் டிவியின் ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' நிகழ்ச்சியை சூப்பர் ஹிட் ஆக்கியவர் தொகுப்பாளினி ரம்யா.

மானட மயிலாட கீர்த்தி

மானட மயிலாட கீர்த்தி

கலைஞர் தொலைக்காட்சியில் பிரபலமான மானாட மயிலாட நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தி சேனல் மாற்றாமல் பார்க்கவைப்பதில் கில்லாடி தொகுப்பாளினி. இவரின் உடை அலங்காரம் ரசிகர்களை முகம் சுழிக்காமல் ரசிக்கவைக்கும். இதற்காகவே தன்னுடைய சம்பளத்தில் பாதிக்கு மேல் செலவழிக்கிறாராம். உடைக்காக ஏன் இத்தனை செலவு என்று யாராவது வி‌சா‌ரி‌த்‌தா‌ல்‌ பணம்‌ சம்‌பா‌தி‌ப்‌பதே‌ நம்‌மை‌ அழகுப்‌படுத்‌தி‌க்‌ கொ‌ள்‌ள தா‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌ கீர்த்தி.

சூப்பர் சிங்கர் ஜூனியர் பாவனா

சூப்பர் சிங்கர் ஜூனியர் பாவனா

இசை நிகழ்ச்சியில் பேசி பேசியே ரசிகர்களை ஈர்த்தவர் பாவனா. திருமணமாகி சிங்கப்பூரில் செட்டில் ஆனாலும் நிகழ்ச்சித் தொகுப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் சென்னையிலே தங்கிவிட்டார். சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சியை சூப்பர் ஹிட் ஆக்கியதில் பாவனாவிற்கும் முக்கிய பங்கு உண்டு என்கின்றனர் ரசிகர்கள்.

அழகான ஐஸ்வர்யா

அழகான ஐஸ்வர்யா

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் அழகோடு ரசிக்கும் படியாக பேசுபவர் ஐஸ்வர்யா என்கின்றனர் ரசிகர்கள். சன் டிவியில் பிரபலங்களை பேட்டி காணும் இவர் ‘வந்தாளே மகராசி' தொடரின் மூலம் சின்னதிரை கதாநாயகியாக அறிமுகமானார். சின்னத்திரை மட்டுமல்லாது தற்போது திரைவிழாக்களைத் தொகுத்து வழங்குகிறார். நடிப்பு, தொகுப்பு என எப்போதும் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு வருங்காலத்தில் இயக்குநர் ஆகவேண்டும் என்பது ஆசையாம்.

காயத்ரி ஜெயராம்

காயத்ரி ஜெயராம்

சன் டிவியில் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் காயத்ரி ஜெயராம் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். இவரது உயரம்தான் இவருக்குப் ப்ளஸ். படபட பேச்சு ஸ்டைலான உச்சரிப்பு ஆகியவை இவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. திருமணமாகி மலேசியாவில் செட்டில் ஆனாலும். இப்பொழுது நிகழ்ச்சி தொகுப்பிற்காக சென்னைக்கு வந்து செல்கிறார். நூற்றுக்கணக்கான சின்னத்திரை கலைஞர்கள் பங்கேற்றும் ரியாலிட்டி ஷோவுக்கு இவரின் நிகழ்ச்சி தொகுப்பு கூடுதல் சுவாரஸ்யம்.

இவர்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நிகழ்ச்சித் தொகுப்பாளினிகள் தங்களில் வசீகரக் குரலால், தன்னம்பிக்கையான பேச்சினால் நிகழ்ச்சியை திறம்பட கொண்டு செல்கின்றனர். அவர்களைப் பற்றி வரும் தினங்களில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X