எங்க அம்மா... சின்னத்திரையைக் கலக்கும் விஜய் - ஷோபா விளம்பரம்!
அம்மா சென்டிமென்ட் என்றால் சினிமாவில் ஒர்க் அவுட் ஆகும் என்பார்கள். அதை இப்போது விளம்பரங்களிலும் கொண்டு வந்து விட்டார்கள். நடிகர் விஜய் தன்னுடைய அம்மா ஷோபாவுடன் சேர்ந்து நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தாயின் மடியே சொர்க்கம்
அனைவருக்குமே அம்மாவின் மடியில் படுத்துக்கொள்வது என்பது பிடித்தமான விசயம். ஆண் குழந்தைகள் பெரும்பாலும் அம்மா செல்லமாகத்தான் இருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு புதிதாக நகை விளம்பரம் ஒன்று வந்துள்ளது. தாய் - மகன் சென்டிமென்ட் கலந்த இந்த விளம்பரம் சூப்பர் ஹிட். அந்த வகையில் தனது தாயார் ஷோபாவுடன் இணைந்து விளம்பரப் படம் ஒன்றில் கலக்கியிருக்கிறார் விஜய். அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு விஜய் பேசுவது போல அந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.

சூப்பர் ஹிட்
தனது தாயாருடன் இணைந்து விஜய் நடித்துள்ள இந்த விளம்பரப் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது டிவிகளில். விளம்பரம் பார்க்க பிடிக்காதவர்கள் கூட ஒரு நிமிடம் ரிமோட்டை மாற்றாமல் அதனை பார்க்கின்றனராம்.

தங்கமான நேரம்
அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் விஜய். அம்மாவின் காதில் ஆடும் ஜிமிக்கி. அதை தொட்டுக்கொண்டு பேசும் விஜய் என கவிதையாய் காட்சி அமைந்துள்ளது.

குழந்தைக்கு அம்மாவின் பெயர்
ஷூட்டிங் முடிந்து வரும்போது ஒரு குழந்தையின் சிரிப்பில் கவரப்படும் விஜய் அக்குழந்தையிடம் செல்கிறார். அப்போது குழந்தையின் தாயார், என் பொண்ணுக்கு பேரு வைங்கண்ணா என்று விஜய்யைக் கேட்க, நெகிழ்ந்து போகும் விஜய், ஷோபா, என்னோட அம்மாவின் பெயர் என்று கூறி பெயர் வைக்கிறார். இதை தனது மடியில் படுத்தபடி சொல்லும் விஜய்யைப் பார்த்து பூரித்துப் போகும் தாயார் ஷோபா, மகன் நெற்றியில் பாசத்தோடு முத்தம் வைக்கிறார்.

விளம்பரத்தில் திரை ஜோடிகள்
சூர்யா - ஜோதிகா நடித்த காபி விளம்பரம்தான் டாப் லிஸ்டில் இருந்தது. காலையில் எழுந்து சின்ன ஊடலுடன் துவங்கும் அவங்களின் விடியல் பின்னர் காபியுடனான கூடலில் முடிகிறது. நீ இல்லாம இருக்க முடியாது என்ற வார்த்தைதான் அந்த விளம்பரத்தின் ஹிட்

சிநேகா பிரசன்னாவின் ஹிட்
தனியாக விளம்பரத்தில் நடித்த சிநேகா பின்னர் பிரசன்னாவை மணம் முடித்த பின்னர் இருவரும் ஆடி மாதத்திற்காக செல்போன் விளம்பரத்தில் ஜோடி சேர்ந்தனர். செல்போன் விற்றதோ இல்லையோ விளம்பரம் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது ஒரு குழந்தையுடன் இணைந்து மசாலாப் பொடி விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

முதன் முறையாக அம்மா பிள்ளை
அதேசமயம், தாயும், மகனுமாக ஒரு விளம்பரத்தில் நடிப்பது என்பது இதுவே முதல் முறை என்பதால், விஜய்,ஷோபா விளம்பரத்திற்கு செம வரவேற்பாம்.


Click it and Unblock the Notifications











