நடிகை ரவீனாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா? ரசிகர் கேட்ட கேள்வி…உண்மையை சொன்ன நடிகர் !

சென்னை : மெளனராகம்2 சீரியல் நடிகர் சல்மானிடம், ரசிகர் ஒருவர், நீங்களும் நடிகை ரவீனாவும் உண்மையிலேயே ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா? என்று விவகாரமான கேள்வி கேட்டுள்ளார்.

மௌனராகம் 2 சீரியல் முதன்மை கதாபாத்திரத்தில் சல்மான் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

இந்த விவகாரமான கேள்விக்கும் கடுப்பாகாமல் அழகாக பதிலளித்துள்ளார் சல்மான், தற்போது இணையத்தில் இந்த கேள்விதான் வைரலாகி வருகிறது.

ரவீனா தாஹா.

ரவீனா தாஹா.

மெளன ராகம்2 சீரியலில் சக்தியாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 18 வயதாகும் ரவீனா பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் தனது அறிமுகமானவர் ரவீனா. அதன் பிறகு 2016ஆம் ஆண்டு வெளியான கதை சொல்லப் போறோம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ராட்சசன் படத்தில்

ராட்சசன் படத்தில்

கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பராக வெற்றியடைந்த திரைப்படம் ராட்சசன். இதில்.அம்மு அபிராமிக்கு அடுத்ததாக மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவீனா. இந்த படத்தில் இவது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு நடனம், காமெடி ஷோக்களிலும் பங்கேற்று நடித்து வருகிறார்.

பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா

பிறகு Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும், ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அதில் இவர் கடைக்குட்டி தங்கச்சியாக பல சேட்டைகள் செய்து அசத்தி இருப்பார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மௌராகம் 2

மௌராகம் 2

விஜய் டிவியில் மௌராகம் 2 சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரவீனா. சீரியலில் அம்மாவின் உயிரை காப்பாற்ற பணத்திற்காக திருமணம் செய்துகொள்ளும் சக்தி அதற்கு பிறகு படும் கஷ்டங்கள் தான் தற்போது சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. ரவீனா சீரியலில் திருமணமான பெண்ணாக நடித்தாலும் அவருக்கு உண்மையில் இன்னும் 18 வயது கூட ஆகவில்லை.

ரீல் ரிலேஷன்ஷிப்

ரீல் ரிலேஷன்ஷிப்

இந்நிலையில், இந்த சீரியலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சல்மான், ரசிகர்களுடன் கேள்வி பதில் செஷனில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில்,ஒரு ரசிகர், உண்மையிலேயே நீங்களும் நடிகை ரவீனா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா? உங்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க்கவுட் ஆகுதே என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சல்மான், அதெல்லாம் இல்லைங்க.. ரீல் ரிலேஷன்ஷிப் மட்டும்தான் என்று பதிலளித்திருக்கிறார்.

ஸ்வீட்டி

ஸ்வீட்டி

இதேபோல், மற்றொரு ரசிகர் ரவீனா சிஸ்டர் பற்றியும் ராகுல் ப்ரோ பற்றியும் சில வார்த்தைகள் கூறுங்கள் என்று கேட்டதற்கு, என் சந்தோஷம் அவர்கள் என அழகாக பதிலளித்துள்ளார். இதை மீண்டும் பகிர்ந்த ரவீனா, ஸ்வீட்டி என கமெண்ட் கொடுத்திருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா தொடர்ந்து ரசிகர்களுக்காக பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X