என்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்: கொந்தளிக்கும் மவுனி 'நாகினி' ராய்

By Siva

மும்பை: தன்னை பற்றி பாலிவுட்காரர்கள் பேசுவதை கேட்ட மவுனி ராய் கோபம் அடைந்துள்ளார்.

நாகினி டிவி சீரியல் மூலம் பிரபலமான மவுனி ராய் பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் நல்ல பெயர் வாங்கினார். இதையடுத்து சல்மான் மவுனி ராயை இயக்குனர்களிடம் பரிந்துரை செய்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகின.

மவுனி அக்ஷய் குமாருடன் சேர்ந்து கோல்டு படத்தில் நடித்துள்ளார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

கோல்டு பட அறிவிப்பு வந்தபோதே சல்மான் கானால் தான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று பேச்சு கிளம்பியது. சல்மானுடனான நட்பை பயன்படுத்தி பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறார் மவுனி என்று ஆளாளுக்கு பேசத் துவங்கினர். இந்நிலையில் தற்போது மீண்டும் அதை பற்றி பேசத் துவங்கியுள்ளனர்.

மவுனி ராய்

மவுனி ராய்

நான் 10 ஆண்டுகளாக நடிகையாக உள்ளேன். நான் ஒரு பெங்காளி பெண். கோல்டு படத்தில் பெங்காளி பெண்ணான மோனோபினா தாஸாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு சல்மான் கானால் தான் கிடைத்தது என்று கூறுவது சரியில்லை. இதை கேட்டு எனக்கு கவலையாக உள்ளது என்கிறார் மவுனி ராய்.

சல்மான் கான்

சல்மான் கான்

எனக்கு கோல்டு படத்தில் நடிக்க வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று நீங்கள் தயாரிப்பாளர் ரித்தேஷிடம் கேட்க வேண்டும். நான் பாலிவுட்டில் அறிமுகமாவதற்கும், சல்மான் கானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது போன்ற பேச்சு எப்படித் தான் கிளம்புகிறது என்றே தெரியவில்லை. ஒரு பெங்காளி பெண்ணுக்கு பெங்காளி கதாபாத்திரம் கிடைக்க பரிந்துரை தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மவுனி.

பாலிவுட்

பாலிவுட்

நான் சல்மான் கான் மீது அதிக அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன். நான் சல்மானின் தீவிர ரசிகை. சிறு வயதில் இருந்தே அவர் படத்தின் போஸ்டர்கள், அவரின் புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளேன். அவருடன் நட்பு பாராட்டுவதால் எனக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. சல்மான் கான் ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் இருந்து எந்த வாய்ப்பும் அளித்து எனக்கு ஒரு போன் கால் கூட வரவில்லை என்று மவுனி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X