மணிமேகலையின் புது வீட்டில் தானாக நகரும் சேர்? என்னங்க நடக்குது? என்னமோ இருக்குதுனு சொல்லும் மணிமேகலை

சென்னை: சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் தொகுப்பாளரும், சமூக வலைதள இன்ஃப்ளூயன்சருமான மணிமேகலை, அண்மையில் தனது நீண்ட நாள் கனவாக இருந்த புதிய வீட்டைக் கட்டி அதற்கான கிரகப்பிரவேச விழாவை மிகவும் விமர்சையாக கொண்டாடினார். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்ட அந்த விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இந்நிலையில், அவரது புதிய வீட்டில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மணிமேகலைக்கும் அவரது கணவர் உசேனுக்கும் இடையேயான மத நல்லிணக்கம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மணிமேகலை இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், உசேன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பதால், புதிய வீட்டின் புதுமனை புகுவிழா இரண்டு மதங்களின் பாரம்பரியத்தையும் மதிக்கும் வகையில் நடத்தப்பட்டது. முதலில் இந்து முறைப்படி பூஜைகள் நடைபெற்ற நிலையில், பின்னர் இஸ்லாமிய மரபுப்படியும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டதாக அவர் தனது யூடியூப் மற்றும் சமூக வலைதள பதிவுகள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார்.

புதிய வீட்டிற்குள் குடியேறிய பிறகு, அங்குள்ள தினசரி அனுபவங்களையும் மணிமேகலை தொடர்ந்து தனது வ்லாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Moving Chair at Manimegalai s New Home Goes Viral Anchor s Funny Reaction Leaves Fans Amused

காற்று: அந்த வீடியோவில், அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த காற்று தொடர்ந்து வீசுவதை காண முடிகிறது. வீட்டின் போர்ட்டிக்கோ மற்றும் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த இலகுரக பொருட்கள் அனைத்தும் காற்றின் வேகத்தால் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு சேர் யாரும் தொடாத நிலையில் மெதுவாக தானாக நகர்வது போல காட்சியளிக்கிறது.

ஜாலியான வீடியோ: இந்த காட்சியை சிரித்தபடியே பதிவு செய்த மணிமேகலை, "இந்த சேர்ல யாரோ உட்கார்ந்திருக்காங்க போல... என்னமோ இருக்குது... காற்றுதான் காரணம்னு தெரியும்... ஆனாலும் பார்க்க கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கு" என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். அவரது பேச்சும், சேர் நகரும் காட்சியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Moving Chair at Manimegalai s New Home Goes Viral Anchor s Funny Reaction Leaves Fans Amused

கமெண்ட்ஸ்: வீடியோவை பார்த்த இணையவாசிகளில் சிலர், "அது பலத்த காற்றால்தான் நகருது" என்று அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளனர். இன்னும் சிலர் வழக்கம்போல், "வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துட்டாங்களோ?", "பேய்க்கு கூட அந்த வீடு பிடிச்சிருக்கு போல", "ஹாரர் பட சீன் மாதிரி இருக்கு" என நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர், "அவ்வளவு காற்று அடிக்கிற இடத்தில் வீடு கட்டியிருக்கீங்களே, ரொம்ப குளுமையாக இருக்கும்" என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எப்போதும் தனது இயல்பான பேச்சு, நகைச்சுவை கலந்த வீடியோக்கள் மற்றும் குடும்ப வாழ்க்கையின் சிறு சிறு தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் மணிமேகலை, இந்த முறை சாதாரணமாக பகிர்ந்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காற்றின் வேகத்தால் நகர்ந்த ஒரு பிளாஸ்டிக் சேர் தற்போது இணையத்தில் சுவாரஸ்யமான விவாதத்திற்கும், மீம்களுக்கும் காரணமாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X