தமிழ் கற்றுத்தரும் புதிய தலைமுறை டிவி
தமிழ்மொழியை தவறின்றி தெளிவாக, பேசவும் எழுதவும், புதிய தலைமுறை டிவியின் 'மொழி அறிவோம்' நிகழ்ச்சியில் கற்றுத் தருகிறார் நிரஞ்சன் பாரதி
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காலை 8 .00 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய விடியல் செய்திகளில் திங்கள் முதல் சனி வரை "மொழி அறிவோம்" என்ற நிகழ்ச்சி கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

மொழி அறிவோம்
தமிழ்மொழியின் அருமைகள், பிழையான சொற்களுக்குச் சரியான சொற்கள், பழமொழிகளின் உண்மையான விளக்கங்கள், மறந்து போன தமிழ்ச்சொற்கள் உள்ளிட்டவை இதில் சொல்லபட்டு வந்தன.

தமிழின் சொல்வளம்
உதாரணமாக, தமிழின் சொல்வளத்தைப் பேசும் விதமாக படிப்படியாக பூவின் பருவ நிலைகளைக் குறிக்கும் சொற்கள்(அரும்பு, முகை, மொட்டு, மலர், பூ, வீ, செம்மல்)

தீயின் பொதுப்பெயர்கள்
அனல், தணல், தழல், கங்கு, நெருப்பு இவையெல்லாம் தீயின் பொதுப்பெயர்களாக இருந்தாலும் இந்த சொற்களுக்கிடையே உள்ள நுண்ணிய வேறுபாடு , கடைபிடித்தான் என்பது ஏன் தவறு, கடைப்பிடித்தான் என்பது ஏன் சரி என்பதற்கான விளக்கம் அளிக்கப்படுகிறது.

பழமொழிக்கு விளக்கம்
அதேபோல மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே (மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தவறு) போன்ற பழமொழியின் விளக்கங்கள் என பல தகவல்கள் மொழி அறிவோம் பகுதியில் விளக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் இலக்கணம்
இதைத் தொடர்ந்து ஒரு புதிய முயற்சியாக, எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக அனா ஆவன்னாவிலிருந்து தொடங்கி தமிழ் இலக்கணம் கற்றுத்தருகின்றனர். அவற்றினை எப்படி உச்சரிப்பது என்றும் அழகாக கற்றுத் தருகிறார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிரஞ்சன் பாரதி .


Click it and Unblock the Notifications











