பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா பகீர் தகவல்

By Siva

சென்னை: பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை நடப்பதாக ரம்யா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று ஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால் ரம்யாவை அனுப்பி விட்டார்கள். ரம்யாவும் விட்டால் போதும் என்று சந்தோஷமாக கிளம்பிவிட்டார்.

பிக் பாஸ் வீட்டில் நிறைய போலி இருப்பதாக ரம்யா கூறினார்.

வீடியோ

வீடியோ

சண்டையை பார்த்தாலே தெறித்து ஓடும் தன்னால் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை என்று உண்மையை கூறினார் ரம்யா. இந்நிலையில் அவர் இன்று ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு இந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.

உண்மை

உண்மை

நான் நானாக இருக்க வேண்டும். நடிக்கக் கூடாது, யாருக்கு பின்னாலும் பேசக் கூடாது என்று நினைத்தேன். அப்படி இருந்தும் நான் 2, 3 இடத்தில் கோபப்பட்டேன். எனக்கு அது நியாயமாக தோன்றியதால் தான் நான் கோபப்பட்டேன். அதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு நான் உண்மையாக இருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது என்கிறார் ரம்யா.

கவலை

கவலை

எனக்கு மெசேஜ் மேல் மெசேஜ், ஏகப்பட்ட மெயில்கள் வந்து கொண்டே இருக்கிறது. நான் எலிமினேட் ஆனதற்காக நிறைய பேர் ஃபீல் பண்ணியிருக்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இதற்கு மேல் அந்த வீட்டில் என்னால் தாக்குப்பிடிக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை என்று ரம்யா தெரிவித்துள்ளார்.

சண்டை

போட்டி, பொறாமை, பின்னால் பேசுவது எல்லாம் அந்த வீட்டில் நடந்து கொண்டிருந்தது. எல்லாத்தையும் தாண்டி அவ்வளவு சண்டைகள் நடக்கும். நீங்கள் பார்ப்பது வெறும் 1 மணிநேரம் தான். ஆனால் நாங்கள் 24 மணிநேரம் அதையே அனுபவித்துக் கொண்டிருந்தோம். ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்கு வெளியே வந்ததில் சந்தோஷம். அதனால் நீங்களுக்கும் எனக்காக சந்தோஷப்பட வேண்டும். ஆதரவளித்ததற்கு மிகவும் நன்றி. உங்களின் ஆதரவு என்றுமே தேவை என்று ரம்யா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X