For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்! ஏன் தெரியுமா?

|

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முகென் நேற்றைய எபிசோடில் சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் இதற்கான பினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கடினமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்குகள் நடைபெற்றன.

இரவு முழுக்க டாஸ்க்

இரவு முழுக்க டாஸ்க்

ஹவுஸ்மேட்ஸ்கள் கடந்த வாரத்தில் சில நாட்கள் தூங்காமல் இரவு முழுக்க டாஸ்க்கில் ஈடுபட்டனர். கோல்டன் டிக்கெட்டுக்கான 9 டாஸ்க்குகளிலும் போட்டியாளர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டனர்.

அதிக பாயிண்ட்ஸ்

அதிக பாயிண்ட்ஸ்

இந்த டாஸ்க்குகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதில் முகென் வெற்றி பெற்றார். 9 டாஸ்க்குகளின் முடிவில் முகென் அதிக பாயிண்ட்ஸ்களை பெற்று டைரக்ட் ஃபைனலுக்கான கோல்டன் டிக்கெட்டை பெற தகுதி பெற்றார்.

கண்களை கட்டி

கண்களை கட்டி

இதனை முன்னிட்டு பிக்பாஸ் அவரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார். கன்ஃபெஷன் ரூமுக்கு சென்ற முகெனின் கண்களை கட்டிக்கொள்ளும்படி கூறினார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்கு வந்த பெண் ஒருவர் முகெனின் கைகளை பிடித்து வெளியே அழைத்து சென்றார்.

கோல்டன் டிக்கெட்

கோல்டன் டிக்கெட்

பின்னர் ஒரு ரூமுக்குள் சென்ற முகெனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கமல்ஹாசன் அந்த ரூமுக்குள் வந்தார். வந்த அவர், முகெனுக்கு இறுதிப்போட்டிக்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.

பார்வையாளர்கள் அதிர்ச்சி

பார்வையாளர்கள் அதிர்ச்சி

முகென் கண்ணைக்கட்டி கன்ஃபெஷன் ரூமில் இருந்து அழைத்து செல்லப்பட்ட சம்பவம் சரவணன் வெளியேற்றப்பட்டதை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் முகென் அழைத்து செல்லப்பட்டது கோல்டன் டிக்கெட்டை பெறுவதற்காக என்பதால் பார்வையாளர்கள் நிம்மதியடைந்தனர்.

English summary
Mugen also called out from confession room like Saravanan in yesterday episode. But He was taken to get golden ticket from Kamal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more