Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான புதிய கேப்டன் அவர் இல்லை... இவர் தான்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் பதவிக்கான டாஸ்க்கு நேற்று நடைபெற்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் வீட்டின் கேப்டனுக்கான டாஸ்க் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றைய எபிசோடில் இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது.
இந்த டாஸ்க்கில் முகென், சாண்டி, கவின் ஆகிய மூன்று பேரும் கலந்து கொண்டனர். இந்த முறை கேப்டன் டாஸ்க் சற்று வித்தியாசமாக நடைபெற்றது.
நிற்க வேண்டும்
அதாவது, போட்டியாளர்கள் உடல் முழுவதும் பாலித்தீன் பேப்பர் சுற்றப்பட்டு உருண்டபடியே சென்று தரையில் வரையப்பட்ட பாக்ஸ்க்குள் எழுந்து நிற்க வேண்டும் என்பது கன்டிஷன்.
கைகளை பயன்படுத்த முடியாமல்
இதனை தொடர்ந்து கவின், சாண்டி, முகென் ஆகிய மூன்று பேருக்கும் சக ஹவுஸ்மேட்ஸ்கள் பாலித்தீன் பேப்பரை சுற்றிவிட்டனர். கைகளை கூட பயன்படுத்த முடியாதபடி சுற்றி கட்டினர்.
கடைசியாக வந்து சேர்ந்த கவின்
இதனை தொடர்ந்து நடைபெற்ற டாஸ்க்கில் முதலில் பாக்ஸ்க்குள் சென்றார் சாண்டி. அவரை தொடர்ந்து முகெனும் சென்றார். பின்னர் பொறுமையாக வந்து சேர்ந்தார் கவின்.
ஜம்மென்று நின்ற முகென்
பாக்ஸ்க்குள் சென்றது முதல் எழுந்து நிற்க பெரும் முயற்சி செய்தார் சாண்டி. ஆனால் முடியவில்லை. இதனை தொடர்ந்து சாண்டி மீது சாய்ந்தபடி முகென் ஜம்மென்று எழுந்து நின்றார்.
நேற்றைய புரமோ
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார் முகென். நேற்று காண்பித்த புரமோவில் சாண்டி கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்றது போல் இருந்தது.
முகென்தான் கேப்டன்
ஆனால் எபிசோடில் முகென்தான் கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்றது தெரியவந்தது. ஏற்கனவே ஃபைனலுக்கான கோல்டன் டிக்கெட்டை பெற்றுள்ள முகென் தற்போது பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகியிருக்கிறார்.