முகெனை பார்க்கும் முன்பே அவங்க அம்மாவும் தங்கச்சியும் யார பார்த்திருக்காங்க பாருங்க!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 79 : Mugen mother enters into bb house

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று முகெனை சந்தித்துள்ள அவரது தாயும் தங்கையும் அதற்கு முன்பே ஒரு பிக்பாஸ் பிரபலத்தை சந்தித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் மலேசியாவை சேர்ந்த பாடகர் முகென் ராவ். இலங்கையை பூர்விகமாக கொண்ட முகென் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் புரணி பேசாமல் சண்டை போடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்களில் முகெனும் ஒருவர். தன் தாய், தந்தை, தங்கை மீது மிகுந்த பாசம் கொண்டவர் முகென் என்பது இதுவரை பார்த்த எபிசோடுகளிலேயே தெரியும்.

முகென் ஃபேமிலி

முகென் ஃபேமிலி

இந்நிலையில் முகெனின் தாயும் தங்கையும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அவர்களை முகென் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தியது முதல் புரமோவிலேயே தெரிந்தது.

அபிராமி சந்திப்பு

அபிராமி சந்திப்பு

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பாகவே முகெனின் தாய் மற்றும் தங்கை அபிராமி ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது அவர்களை அபிராமி கட்டியணைத்து எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அழகான அம்மா

முகெனின் அம்மாவுடன் எடுத்துள்ள போட்டோவில் இந்த அழகான பெருமைக்குரிய அம்மாவை சந்தித்தேன். ஆதரவின் தூண்.. லவ் யூ அம்மா நீங்கள் சிரித்துக்கொண்டிருப்பதை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சேட்டை தங்கை

முகெனின் தங்கையுடன் எடுத்த போட்டோவையும் பதிவிட்டுள்ள அபிராமி, ஜனனி.. எங்களின் சேட்டை பெண் என பதிவிட்டிருக்கிறார்.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

அபிராமி பகிர்ந்துள்ள இந்த போட்டோக்களை பலரும் லைக் செய்து வருகின்றனர். இந்தபோட்டோக்கள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருதலை காதல்

ஒருதலை காதல்

நேற்றே ஷுட் செய்யப்படும் காட்சிகள்தான் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்படுகிறது. இந்த சந்திப்பும் நேற்றுதான் நடந்திருக்கிறது என இன்றைய புரமோ உறுதிபடுத்தியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அபிராமி முகெனை ஒருதலையாக காதலித்தார்.

வெளியேறிய அபிராமி

வெளியேறிய அபிராமி

இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு இருவரும் சேரை தூக்கும் அளவுக்கு போனது. இதைத்தொடர்ந்து அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X