ஆட்டம் பாட்டம்.. கச்சேரி.. 100வது நாளில் பிக்பாஸ்.. களைகட்டும் வீடு! கிரங்க வைத்த முகென்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி 100வது நாளை எட்டியுள்ள நிலையில் ஆட்டம் பாட்டம் கச்சேரி என களைகட்டியுள்ளது பிக்பாஸ் வீடு.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. முதல் 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி அடுத்த இரண்டு நாட்களில் ஒரு போட்டியாளரையும் வைல்டு கார்டு என்ட்ரியில் ஒரு போட்டியாளரையும் சந்தித்தது.
மொத்தம் 17 போட்டியாளர்களுடன் நகர்ந்த இந்நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு பேர் ஃபைனல்ஸ்க்கு தகுதி பெற்றுள்ளனர். முகென் ஏற்கனவே கோல்டன் டிக்கெட் பெற்று ஃபைனல்ஸ்க்கு தகுதி பெற்றுவிட்டார்.

இறுதிப்போட்டி
அவரை தொடர்ந்து, சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோரும் ஃபைனல்ஸ்க்கு தகுதி பெற்றிருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார் கமல். இதனை தொடர்ந்து, முகென், சாண்டி, ஷெரின், லாஸ்லியா ஆகியோர் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றனர்.

ஆட்டம் பாட்டம்
ஃபைனல்ஸை கொண்டாடும் வகையில் பழைய போட்டியாளர்களை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்றைய எபிசோடிலேயே அவர்கள் அனைவரும் ஹவுஸ்மேட்ஸுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடினர்.

விழாக்கோலம்
பஃபே சிஸ்டம் டின்னர், டான்ஸ் என கொண்டாடினர் ஹவுஸ்மேட்ஸ். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் பிக்பாஸ் வீடு விழாக்கோலம் பூண்டிருப்பது தெரியவந்துள்ளது.

அசத்திய முகென்
இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார் பிக்பாஸ். அதன்படி நடைபெறும் இசை நிகழ்ச்சியில் முகென், என்ன மறந்த.. என்ன மறந்த.. பாடலை பாடி அசத்துகிறார். இதனை ஹவுஸ்மேட்ஸ்கள் மெய் மறந்து ரசிக்கின்றனர். இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ.

பிக்பாஸ்க்கு நன்றி
இரண்டாவது புரமோவும் முகெனை மையப்படுத்தியே உள்ளது. நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக உள்ளது இரண்டாவது புரமோ. இதில் பேசும் முகென் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துள்ள பிக்பாஸ்க்கு நன்றி கூறினார். குறுகிய காலத்தில் பலருக்கும் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்த பிக்பாஸ்க்கும் மகிழ்ச்சியான நினைவுகளை கொடுத்த சாண்டிக்கும் தேங்க்ஸ் என்கிறார் முகென்.


Click it and Unblock the Notifications











