பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி.. வனிதாவை அறைந்த முகென்? ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாக தகவல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் விருந்தாளியாக நுழைந்துள்ள வனிதாவை முகென் அறைந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வனிதா இரண்டாவது வாரமே மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் டிஆர்பி படுத்ததால் கஸ்தூரியை வைல்டு கார்டு என்ட்ரியாக இறக்கியது நிகழ்ச்சி குழு.
ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பொங்காமல் காமெடி பீஸ்ஸாகி விட்டார். இதனால் செய்வதறியாமல் திணறிய பிக்பாஸ், சண்டக்கோழி கம் கன்டென்ட் கிவ்வரான வனிதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக அழைத்தது.

முகென் கோபம்
பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்தது முதலே பிரச்சனைதான். முதலில் அபிக்கு தூபம் போட்டு முகெனுக்கு எதிராக திருப்பினார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் அடிக்க சேரை தூக்கினார் முகென்.

கொம்பு சீவிய வனிதா
இதனால் பிக்பாஸ் வீடே அல்லோகளப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்றைய எபிசோடில் தனது வேலையை மதுமிதாவிடம் காட்டினார் வனிதா. மதுமிதாவிடம் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் பெண்களை பயன்படுத்திக்கொள்வதாக கூறி கொம்பு சீவிவிட்டார்.

அதிர்ச்சி சம்பவம்
இதனால் கொந்தளித்துப்போன மதுமிதா, ஆவேசத்தில் கத்தினார். மதுமிதாவை கத்தவிட்ட கூலாக கேரட் சீவிக்கொண்டிருந்தார் வனிதா. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனிதாவை அறைந்த முகென்?
அதாவது, வனிதா சண்டை மூட்டிவிடுவதால் ஆத்திரமடைந்த முகென் அவரை கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் முகென் பிக்பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
நேற்று நடந்ததா?
முகென் அடித்ததால் அதிருப்தியடைந்த வனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே போயிவிட்டதாகவும் தகவல்கள் றெக்கை கட்டிப்பறக்கின்றன. இந்த சம்பவங்கள் நேற்று நடந்துள்ளன. ஒரு நாள் தாமதமாகதான் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். இதனால் இந்த சம்பவம் உண்மை எனில் இன்று வெளியாகும் புரமோவிலோ அல்லது நிகழ்ச்சியிலோ அதனை எதிர்பார்க்கலாம்.
உண்மையா?
வதந்திகளா உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் முகென் வனிதாவை அறைந்துவிட்டதால் வனிதாவை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள். முகெனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் ஒரு நெட்டிசன்.

ரெட் கார்டு
ஏற்கனவே கோவத்தில் கட்டிலை உடைத்தார் முகென். நேற்று முன்தினம் நடைபெற்ற சண்டையிலும் அபிராமியை அடிக்க சேரை தூக்கினார். அப்போதே அவருக்கு ரெட்கார்டு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











