pandian stores serial: வெறுமனே ஒரு மணி நேரம் பேசிட்டு படுத்துருவோம்னு சொல்லுவேன்...!
சென்னை: தினம் ராத்திரி ஒரு மணி நேரம் பேசிட்டு இருந்துட்டு படுத்துருவோம்னு சொல்வேங்க,...அவ்ளோதான்னு முல்லை சொல்றா. எதுக்கு அப்படி சொல்லணும்னு கதிர் கேட்கிறான். பின்னே? நாம வெறுமனே ஒரு மணி நேரம் பேசிட்டு அப்புறம் படுத்துடறோமே.. அதைத்தான் சொன்னேன்னு சொல்லிட்டு. முல்லை எழுந்து கட்டிலில் அந்தப் பக்கம் திரும்பி படுத்துக்கறா.
Recommended Video
கதிர் எழுந்து முதுகை காண்பித்து படுத்து இருக்கும் முல்லையை பார்த்தபடி நிக்கறான். அவள் தோளில் கை வைக்கப் போறான். கையைக் கிட்டே கொண்டு போயி யோசிச்சு நிற்க... நாம மட்டும் என்ன யோக்கியமா... அவுக கிட்டே வந்தாலே என்னவோ மாதிரி ஆயிருது...டியூப் லைட் டியூப் லைட்டுன்னு தலையில் அடிச்சுக்கறா.
இதை பார்த்துக்கொண்டே நின்ற கதிர், ம்ஹூம்.. இப்போ அவளை எழுப்பினா இன்னும் எதாவது பேசுவா. வேணாம்னு சொல்லிட்டு கீழே படுக்கப் போறான். முல்லை எப்போதும் அங்கு கிடக்கும் ஒற்றைக் கட்டிலில் படுப்பா... இவன் கீழேதான் பாய் விரித்துப் படுப்பான். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கும் கதைதான் இது.

வத்திக்குச்சி
முல்லை, கதிர் இருவருக்கும் தினமும் இதே ரூம்தான். அதே முல்லை கதிர்தான். ஆனால், இருவரும் பேசிக்கொண்டாலே வத்திக்குச்சி உரசிக்கொண்ட மாதிரி, முல்லை கதிரின் ரொமான்ஸை எதிர்பார்த்து காத்து இருந்த சீரியல் ஆர்வலர்களுக்கு பத்திக்குது. ரசிச்சு ரசிச்சு பார்க்கறாங்க. அவங்க உணர்வுகளை புரிஞ்சுக்கிட்ட இயக்குநர் அத்தோடு அந்த சீனை முடிச்சு ஓவர் டு ஹால்னு சிச்சுவேஷனை மாத்திடறார்.

பத்திக்கற மூடில்
முல்லையும், கதிரும் எப்போது பார்த்துக்கொண்டாலும், பேசிக்கொண்டாலும் பார்க்கறவங்களுக்கும் பத்திக்கிற மூடிலேயே இந்த இரு கேரக்ட்டரின் காட்சியைக் கொண்டு போய் எப்போதும் பார்வையாளர்களின் அந்த மூடை கை வசம் நிலைக்க வச்சு இருக்கார் இயக்குநர். இதுதான் சாதாரணமாக காதலிப்பவர்களிடமும், புதிதாக கல்யாணம் ஆனவர்களிடமும் இழையோடும் காதல்.. ரொமான்ஸ். எதையும் மிகையாக்கி காண்பிக்காமல் இயக்குநர் ஜெயிச்சு இருக்கார்.

மீனா ஜீவா
முல்லை கதிர் காதல்.. ரொமான்ஸ் என்று ஒரு பக்கம் கதையை நகர்த்தினாலும், ஜீவா, மீனா குடும்பத்தை விட்டுட்டு மீனாவின் அப்பா வீட்டுக்கு சென்று இருப்பது. போனே பண்ணாத ஜீவாவின் மேல் குடும்பமே கொஞ்சமா செல்லக் கோபமாக இருப்பது என்று கதையை நகர்த்தியும் இருக்காங்க. நாளைக்கு வீட்டுக்குப் போகலாம்னு ஜீவா குஷியில் இருக்கான். மீனா வருத்தத்தில் இருக்கா.

தானம் மூர்த்தி
என்னதான் குழந்தை குழந்தை என்று எல்லாரும் கேட்க ஆரம்பிச்சு இருந்தாலும், இன்னும் தங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என்று தனமும், மூர்த்தியும் நினைக்கும் காலம் வரவில்லை. அந்த காலம் வரும்போது உண்மையில் அவர்களை உலுக்கி எடுக்கும் காட்சியாகத்தான் அது இருக்கும் என்று இப்போதே எதிர்பார்க்கும்படியாகத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை சென்று கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications