பிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல்: அடேங்கப்பா, இது லிஸ்டிலேயே இல்லயே
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டை புரட்டிப் போட கவர்ச்சிப் புயல் வருகிறதாம்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் 2 கவுண்ட் டவுன் ஏற்கனவே துவங்கிவிட்டது. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எதிர்த்தாலும் நிகழ்ச்சியை பார்க்க பலரும் தயாராகிவிட்டனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போகும் ஒரு போட்டியாளர் பற்றி தெரிய வந்துள்ளது.

வீடியோ
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்களின் குணங்களை கமல் ஹாஸன் தெரிவித்தார். ஆனால் இப்படி ஒரு கவர்ச்சிப் புயல் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதை கமல் சொல்லாமல் விட்டுவிட்டாரே.

மும்தாஜ்
கோலிவுட்டின் கவர்ச்சி ராணியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். தற்போது சினிமாவில் இருந்து தள்ளியிருக்கும் அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாராம்.

பட வாய்ப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் புகழ் கிடைப்பதுடன் பட வாய்ப்புகளும் வருவதை திரையுலகினர் உணர்ந்துள்ளனர். பட வாய்ப்பை எதிர்பார்த்து தான் மும்தாஜ் வருவதாக கூறப்படுகிறது.

சினிமா
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளவர்களும் உண்டு. ஆனால் மும்தாஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கோலிவுட்டில் பிசியாகிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











