நீ என்கிட்ட வராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு கதறி அழுத மும்தாஜ் #BiggBoss2Tamil

By Siva

Recommended Video

வராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீடு நேற்று ஒரே அழுகாட்சியாக இருந்தது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க நினைத்து ஏதேதோ செய்கிறார்கள். ஆனால் ப்ரொமோ வீடியோக்களில் இருக்கும் சுவாரஸ்யம் நிகழ்ச்சியில் இல்லை.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒரே அழுகையாக இருந்தது.

டேனி

டேனி

டேனி தன்னை ரொம்ப கிண்டல் செய்வதால் மனமுடைந்த ஆர்.ஜே. வைஷ்ணவி ஒரு ஓரமாக அமர்ந்து அழத் துவங்கிவிட்டார். ஒரு முறை இரண்டு முறை என்றால் பரவாயில்லை ஆனால் எப்பொழுது பார்த்தாலும் கிண்டல் செய்வது கஷ்டமாக இருக்கிறது தெரியுமா என்று வைஷ்ணவி அழுது கொண்டே டேனியிடம் கூறினார்.

அழுகை

அழுகை

வைஷ்ணவி அழுவார் என்று பார்வையாளர்கள் யாரும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அங்கே தான் டுவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். வைஷ்ணவியாவது அழுவதாவது. டேனியை ஏமாற்ற அவர் செய்த டிராமா அது. அவரின் போலிக் கண்ணீரை உண்மை என்று நினைத்து ஏமாந்துவிட்டார் நடிகரான டேனி. வைஷ்ணவியிடம் ஜூலியின் சாயல் தெரிகிறதே. கடந்த சீசனில் ஜூலி அழுது சீன் போட்டு நடித்தது தான் நினைவுக்கு வருகிறது.

கண்ணீர்

கண்ணீர்

சமையல் அறையில் ஜாலியாக வேலை செய்து கொண்டிருந்த மும்தாஜுக்கு ஷாரிக் ஹஸனை பார்த்தால் தனது அண்ணன் மகன் அர்மான் நினைவு வர உடனே கதறி அழத் துவங்கிவிட்டார்.

ஷாரிக்

ஷாரிக்

மும்தாஜ் அழுவதை பார்த்து அருகில் வந்த ஷாரிக்கை கிட்ட வராத போ என்று மும்தாஜ் விரட்டினார். பின்னர் ஷாரிக் வந்து மும்தாஜின் கண்ணீரை துடைத்துவிட்டு கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

மும்தாஜ் அழுததை பார்த்த பிக் பாஸ் போட்டியாளர்களும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். அர்மான் தான் ஷாரிக் வடிவில் இங்கு இருக்கிறார் என நினைத்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X