கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுத மும்தாஜ்: 'ஷட் அப்' என்று அதட்டிய மமதி

By Siva

சென்னை: தன் தோழி மமதி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதும் மும்தாஜ் அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரத்தில் யாரையும் எலிமினேட் செய்யவில்லை. இந்நிலையில் 2வது வாரத்தில் ஒருவரை வெளியே அனுப்பியே ஆக வேண்டும்.

இதையடுத்து மமதி சாரி வெளியே அனுப்பப்பட்டார்.

மும்தாஜ்

மும்தாஜ்

உங்கள் இருவரில் யார் வெளியே போவீர்கள் என்று நினைக்கிறீர்கள் என கமல் மமதி மற்றும் மும்தாஜிடம் கேட்டார். பின்னர் அவரே வேண்டாம் நன்றாக இருக்காது, உங்களுக்கு இடையே நல்ல உறவு உள்ளது என்றார்.

புரிதல்

புரிதல்

புரிதலுக்கு நன்றி என்று மமதி கமலிடம் தெரிவித்தார். அவரோ புரியாமலா இருக்கு என்று கேட்க போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டினார்கள். மமதி, மும்தாஜ் இடையேயான நட்பையும் பாராட்டினார் கமல்.

கமல்

கமல்

ஆஹா, என்ன மும்தாஜ் என்று பில்ட்அப் கொடுத்துவிட்டு சிட் டவுன் என்றார் கமல். அப்பொழுதே மும்தாஜின் முகம் மாறிவிட்டது. தோழி கிளம்புகிறாள் என்ற கவலையில் முகம் மாறியது.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

எலிமினேஷன் கார்டில் மமதி சாரியின் பெயர் இருப்பதை பார்த்த பார்வையாளர்கள் குஷியாகிவிட்டனர். மமதியை கட்டிப்பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார் மும்தாஜ். அய்யய்யே, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு மமதி வீட்டுக்கே போகலாம் மும்தாஜ். அழக்கூடாதுமா.

ரம்யா

ரம்யா

என் கண்ணையே ஒப்படைக்கிறேன் என்பது போன்று மும்தாஜை ரம்யாவிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினார் மமதி. என்னால் தான் உன்னை நாமினேட் செய்தார்கள், சாரி என்று மும்தாஜ் கூறினார். அதற்கு மமதியோ ஷட் அப், நீ வெளியே வாடி பார்த்துக்கலாம் என்றார்.

நடிப்பு

நடிப்பு

மும்தாஜ் மமதியை கட்டிப்பிடித்து அழுது கொண்டே இருந்ததை பார்த்த பிற போட்டியாளர்கள் இது உலகமகா நடிப்புடா சாமி என்ற ரேஞ்சுக்கு கடுப்பானார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X