பிக் பாஸுக்கு மட்டும் தான் வருமா, மும்தாஜுக்கும் நல்லாவே வரும்
சென்னை: பிக் பாஸ் வீட்டில் மும்தாஜ் அண்ணியார் வழியில் சென்று கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் முரண்டு பிடித்த மும்தாஜ் தற்போது சமத்தாகிவிட்டார். டாஸ்கின் போது சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக் கொள்வது இல்லை.
உடல் நலக்குறைவு பற்றி அடிக்கடி பேசுவது இல்லை.

மும்தாஜ்
மும்தாஜ் என்ற பெயரை கூறியதுமே அவரா, அவர் ரொம்ப பொறுமையானவர். சக போட்டியாளர்களை பேட்டா, பேட்டி, மேரி பச்சா என்று பாசமாக அழைப்பார். யாருக்கு கஷ்டம் என்றாலும் தானாக சென்று ஆறுதல் கூறுவார். தன்னை அசிங்கப்படுத்திய யாஷிகா, ஐஸ்வர்யாவை கூட மன்னித்து அவர்களை தன் மடியில் படுக்க வைத்து பாசம் காட்டினார் என்பார்கள்.

அண்ணி
இந்தி பிக் பாஸின் 11வது சீசனில் டைட்டில் வென்றவர் தொலைக்காட்சி நடிகை ஷில்பா ஷிண்டே. தொலைக்காட்சி தொடரில் அண்ணியாக நடித்து பிரபலமான ஷில்பாவுக்கு பிக் பாஸ் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவர் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை பேட்டா என்று அழைத்து பாசம் காட்டியுள்ளார். அதற்காக அவர் யாருடனும் சண்டை போடவில்லை என்று சொல்லவில்லை. பாசத்தை தனது பக்கபலமாக வைத்து டைட்டிலை வென்றுள்ளார்.

டைட்டில்
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த மும்தாஜ் அண்ணியார் ஷில்பா ஷிண்டேவின் வழியை பின்பற்றுவதாக பேசப்படுகிறது. அண்ணியாரின் வழி மும்தாஜுக்கு இதுவரை கை கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும். தான் என்ன செய்தாலும் மும்தாஜ் அமைதியாக இருந்ததை பார்த்து தான் மகத்துக்கு வெறி ஏறி அந்த ஆட்டம் போட்டார். அதனாலேயே மக்கள் மத்தியில் கெட்டப் பெயரும் எடுத்தார்.

இந்தி பிக் பாஸ்
மும்தாஜ் போன்றே ஐஸ்வர்யாவும் இந்தி பிக் பாஸ் பார்த்துள்ளார். ஆனால் அவர் யார் வழியையும் பின்பற்றாமல் உள்ளார். பிக் பாஸே இந்தி நிகழ்ச்சியில் இருந்து டாஸ்க், காட்சிகளை காப்பியடிக்கும் போது மும்தாஜ் அண்ணியார் வழியில் செல்வதில் என்ன தவறு உள்ளது. இந்தி பிக் பாஸை பார்த்து சல்மான் கான் போன்று கமல் ஹாஸனையே நடிக்க வைத்தார் பிக் பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி
பிக் பாஸை டைட்டிலை கைப்பற்றும் வாய்ப்பு மும்தாஜ் மற்றும் ரித்விகாவுக்கு உள்ளது. ஆனால் ரித்விகா எதற்குமே ரியாக்ட் ஆகாமல் போலியாக நடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. சென்றாயனை போன்றே ரித்விகாவும் இதுவரை தனது நிஜமான குணத்தை காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ரித்விகா தனது உண்மையான குணத்தை காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











