அய்யோ பாவம் மும்தாஜுக்கு இப்படி ஒரு பிரச்சனையா
Recommended Video

சென்னை: பார்க்க பொசு பொசுன்னு அழகாக இருக்கும் மும்தாஜுக்கு பெரிய பிரச்சனை உள்ளது.
சில காலம் சினிமாவை விட்டு தள்ளியிருந்த மும்தாஜ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். மும்தாஜ் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வேகத்தில் அவருக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கிவிட்டனர்.
பிக் பாஸ் வீட்டின் நாட்டாமை போன்று செயல்படுகிறார் மும்தாஜ்.

மமதி
மும்தாஜும், மமதி சாரியும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு தங்களை பற்றி புறம் பேசுவதாக சக போட்டியாளர்கள் நினைக்கிறார்கள்.

பிடிக்கவில்லை
நித்யாவுக்கு சமையல் அணி கேப்டனான மும்தாஜை சுத்தமாக பிடிக்கவில்லை. தன்னை அதிகாரம் செய்வதாக நினைக்கிறார். நித்யா மீது கோபத்தில் இருக்கும் பாலாஜி கூட தன் மனைவியை சமையல் அறையில் வேலைக்காரி போன்று நடத்துவதாக நினைக்கிறார்.

பாதிப்பு
மும்தாஜ் தனக்கு severe gastritis வயிறு, இரைப்பை பிரச்சனை இருப்பதாக சக போட்டியாளர்களிடம் தெரிவித்தார். உடல் நலப் பிரச்சனை இருந்தால் இங்கே எதற்கு வரணும் வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே என்று ஆர். ஜே. வைஷ்ணவி கூறினார்.

கவலை
மும்தாஜுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது ரசிகர்களை அவர் மீது பாவப்பட வைத்துள்ளது. பிரவுன் பிரெட், பால் தயாரிப்புகளை தன்னால் சாப்பிட முடியாது என்றும், சாப்பிடுவதே பிரச்சனையாக உள்ளது என்றும் மும்தாஜ் கூறியதை பார்த்து பார்வையாளர்களுக்கு அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் ஏற்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications











