twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடுப்பேற்றிய மும்தாஜ்: செம நோஸ்கட் கொடுத்த கமல்

    By Siva
    |

    சென்னை: சும்மா நை நைன்னு குறை சொல்லிக் கொண்டே இருந்த மும்தாஜுக்கு கமல் ஹாஸன் நறுக்கென்று பதில் அளித்துள்ளார்.

    பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மும்தாஜுக்கு யாருடனும் ஒத்துப் போவது இல்லை. அனைவரிடமும் மல்லுக்குப் பாய்கிறார் பின்னர் சமாதானம் ஆகிறார். டாஸ்க் கொடுத்தால் எனக்கு உடம்புக்கு சரியில்லை செய்ய முடியாது என்கிறார்.

    இப்படி உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்த போதே நான் வர மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டாமா?

    மும்தாஜ்

    மும்தாஜ்

    கடந்த வாரம் அவர் மகத் மற்றும் ஷாரிக்குடன் மோதி ஓவராக சத்தம் போட்டார். அவர் போட்ட சத்தம் கமலுக்கு கேட்காமலா இருந்திருக்கும். நேற்று அந்த சண்டை குறித்து விசாரித்தார் கமல். என்னால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வீட்டில் உள்ள 99 சதவீதம் பேர் என்னை பற்றி நினைப்பது தப்பு, என்னை பற்றி எனக்கு தான் தெரியும் என்று மும்தாஜ் கூறியதை கேட்டு கமலுக்கே எரிச்சல் வந்துவிட்டது.

    கமல்

    கமல்

    ஒரு காலுக்கு முன்னாடி ஒரு கால் வச்சுட்டு தான் நடக்கணும் என்றார்கள் என்று மும்தாஜ் கமலிடம் கூற அவரோ பார்வையாளர்கள் பக்கம் திரும்பி நீங்கள் எல்லாம் எப்படி நடப்பீங்க என்று கேட்க போட்டியாளர்கள் சிரித்துவிட்டார்கள். மும்தாஜ் முகத்தில் ஈயாடவில்லை. ஒரு காலை முன்னாடி வைக்காமல் எப்படி நடப்பது என்று கமல் கேட்டார். இல்லை சார் அங்கு ஒரு கோடு இருந்தது அதில் தான் நடக்க வேண்டும் என்றார்கள் என மும்தாஜ் மேலும் பேசி எரிச்சலூட்டினார்.

    ஃபர்ஸ்ட் ரேங்க்

    ஃபர்ஸ்ட் ரேங்க்

    சென்றாயன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியதை மும்தாஜால் ஜீரணிக்கவே முடியவில்லை. கடிதம் எழுதும்போது இப்படிக்கு போடுவது போன்று யாரிடம் பேசினாலும் அதையே கூறுகிறார். கமலிடமும் அதையே தெரிவித்தார். பாத்ரூம் போக விடாமல் சென்றாயனை மும்தாஜ் டார்ச்சர் செய்தது கமலுக்கும் பிடிக்கவில்லை.

    டாஸ்க்

    டாஸ்க்

    உங்களுக்கு மட்டும் உடம்பு சரியில்லை என்கிறீர்கள் சென்றாயனை பாத்ரூமுக்கு போக விடாமல் இப்படி செய்தது சரியா, அவர் உடம்பு பற்றி அவருக்கு தானே தெரியும், எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும் என்பதும் அவருக்கு தானே தெரியும் என்று கமல் மும்தாஜிடம் நன்றாக கேட்டார். நான் பாத்ரூமுக்கு போயிட்டு வந்துவிட்டு பாடுகிறேன், அவசரமாக இருக்கிறது என்று சென்றாயன் கூறினார். ஆனால் அவர் அப்படி கூறவே இல்லை என்று அதுவும் கமலிடமே பொய் சொல்கிறார் மும்தாஜ்.

    English summary
    Bigg Boss 2 Tamil contestant Mumtaz is really really irritating. She has even irritated Kamal Haasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X