Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக் பாஸுன்னா கொம்பா?: மைக்கை கழற்றி போராட்டத்தில் குதித்த மும்தாஜ்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் போராட்டம் நடத்தியுள்ளார் மும்தாஜ்.
பிக் பாஸ் வீட்டில் எஜமானர் டாஸ்க் போய்க் கொண்டிருக்கிறது. பெண்கள் அனைவரும் ஆண்களை ஐயா என்று அழைத்து அவர்கள் சொல்லும் வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகத் ஆடும் ஆட்டம் பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
சேலை
பணிப்பெண்களாக இருக்கும் பெண் போட்டியாளர்கள் பிக் பாஸ் கொடுக்கும் சேலையை அணிந்து கொண்டு தான் வேலை பார்க்க வேண்டும். அவர்கள் தங்குவதற்கு கூட மெத்தை இல்லாத கட்டில் போட்ட அறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்தாஜ்
மும்தாஜை தவிர மற்ற பெண் போட்டியாளர்கள் பாத்ரூமில் சேலை கட்டிவிட்டு வந்தார்கள். பாத்ரூம் ஈரமாக இருப்பதால் தன்னால் அங்கு சேலை கட்ட முடியாது என்று மும்தாஜ் கூறினார்.
பிக் பாஸ்
பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருக்கும் பாத்ரூமை திறந்துவிடுமாறு மும்தாஜ் பிக் பாஸிடம் கேட்டார். அதற்கு பிக் பாஸ் பதில் சொல்லாததால் மும்தாஜ் தனது மைக்கை கழற்றி வைத்துவிட்டார்.
மாட்டேன்
மும்தாஜ் உங்களின் மைக்கை எடுத்து மாட்டுங்க என்று பிக் பாஸ் கூறியும் மும்தாஜ் கேட்கவில்லை. உங்களுடன் பேச வேண்டும் இல்லை என்றால் பாத்ரூமை திறந்துவிடுங்க. இதில் ஏதாவது ஒன்று நடக்கும் வரை மைக்கை மாட்ட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார் மும்தாஜ்.
நித்யா
கேப்டன் நித்யா சொன்னதால் மும்தாஜ் சேலை கட்டினார். ஆனால் மைக்கை மாட்ட மாட்டேன் என்றார். அது என்ன மும்தாஜ் மட்டும் ஒய்யாரமா என்று சக போட்டியாளர்கள் பேசினார்கள்.