அம்மாவுக்கே பண்ண மாட்டேன், உனக்கு போய் பண்ணுவேனா?: ரித்விகாவை ஏமாற்றிய மும்தாஜ்

By Siva

Recommended Video

பிக் பாஸ் டாஸ்க் : ரித்விகாவை ஏமாற்றிய மும்தாஜ்- வீடியோ

சென்னை: சக போட்டியாளரான ரித்விகாவை காப்பாற்ற செய்ய வேண்டிய டாஸ்கை செய்ய மறுத்துள்ளார் மும்தாஜ்.

பிக் பாஸ் 2 வீட்டில் போன் காலை எடுத்து பேசுபவர் அடுத்த வாரத்திற்கு நேரடியாக நாமினேட் செய்யப்படுகிறார். அதில் இருந்து அவரை காப்பாற்ற சக போட்டியாளர் தியாகம் செய்ய வேண்டும்.

இந்த லூசுத்தனமான டாஸ்க் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

பிக் பாஸுக்கு விஜயலட்சுமி, ரித்விகா மீது என்ன கோபமோ தெரியவில்லை. விஜியை சாணி பாத் எடுக்க வைத்தார். அந்த பொண்ணும் முடியாது என்று சொல்லாமல் செய்தார். ரித்விகா பாவம், விஜியை காப்பாற்ற தனது கையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் லோகோவில் இருக்கும் கண்ணை பச்சை குத்திக் கொண்டார். அந்த பச்சை அழியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

சென்றாயனுக்காக ஐஸ்வர்யா தனது தலைமுடியை நறுக்கியதை பார்த்து அய்யோ பாவம் என்று தோன்றவில்லை. காரணம் ஐஸ்வர்யா சென்றாயனை ஏமாற்றினார். மேலும் ஐஸுக்கு முடி வெட்டிவிட வெளியில் இருந்து ப்ரொஃபஷனலை வரவழைத்தனர். அந்த ஐஸுக்கு முடியை வெட்டாமல் மொட்டையை போடுங்கப்பா என்று தான் பார்வையாளர்கள் கூறினார்கள்.

முடி

ஐஸ்வர்யா முடி வெட்ட சம்மதித்த போதே என் முடியில் 2 இன்ச் கட் பண்ண சொன்னாலே எனக்கு உயிர் போனது மாதிரி இருக்கும் என்றார் மும்தாஜ். இந்நிலையில் ரித்விகாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மும்தாஜ் தனது தலைமுடிக்கு பச்சை கலர் அடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஹேர் கலர் பண்ண முடியாது என்று அவர் கறாராக தெரிவித்துவிட்டார்.

முடியாது

முடியாது

சக போட்டியாளர்களை காப்பாற்ற இப்படி லூசுத்தனமாகத் தான் செய்ய வேண்டுமா பிக் பாஸ்? மும்தாஜ் அடம்பிடிப்பதில் தவறு இல்லை. ரித்விகா நாமினேட் ஆனார் என்றால் அவரை ஓட்டு போட்டு காப்பாற்ற பார்வையாளர்களுக்கு தெரியும். நீங்க முதலில் இந்த கிறுக்குத்தனமான டாஸ்கை நிறுத்தி போட்டியாளர்களை நிம்மதி அடையச் செய்தால் நல்லது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X