சென்றாயன் பெற்றோருக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்ட மும்தாஜ்: அப்படி என்ன செய்தார்?

By Siva

Recommended Video

தன் தங்க வளையலை சென்ராயன் மனைவிக்கு அளித்த மும்தாஜ்- வீடியோ

சென்னை: சென்றாயனுக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்டுள்ளார் மும்தாஜ்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சென்றாயனின் மனைவி கயல்விழியும் சரி, அவரின் பெற்றோரும் சரி அனைத்து போட்டியாளர்களுடனும் பாசமாக பேசினார்கள். பிக் பாஸ் என்றாலே சண்டை சச்சரவு என்பதை மாற்றி விக்ரமன் படம் போன்று காண்பித்தனர்.

சென்றாயனின் அம்மா, அப்பாவுக்கு மும்தாஜை மிகவும் பிடித்திருந்தது.

மனைவி

மனைவி

எத்தனை மாசம் என்று கேட்ட சென்றாயனிடம் 4 மாதம் என்றார் கயல்விழி. கடிதத்தில் ஏன் எழுதவில்லை என்றால் நேரில் வந்து சொல்லி உன் ரியாக்ஷனை பார்க்க ஆசையாக இருந்தது என்று கயல்விழி மேலும் கூறினார். நான் கர்ப்பமானதற்கு பரிசு வேண்டும் அதை வெளியே வந்தவுடன் நீ தர வேண்டும் என்று கணவனிடம் கூறினார் கயல்விழி.

உடை

உடை

நான் டி-சர்ட் உள்ளிட்ட சில உடைகள் கொண்டு வந்திருக்கிறேன். இங்கிருப்பவர்களுக்கு பிடித்தால் அவர்களுக்கு கொடு என்று சொன்ன கயல்விழியை பார்வையாளர்களுக்கு பிடித்துவிட்டது. இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது அதனால் அனைவரும் என்ஜாய் பண்ணுங்க என்று கயல்விழி கூறியதை கேட்க நன்றாக இருந்தது.

ஃப்ரீஸ்

ஃப்ரீஸ்

பிக் பாஸ் ஃப்ரீஸ் என்றதும் கயல்விழி கிளம்புகிறாரே என்பதை பார்த்த சென்றாயன் மீண்டும் அழத் துவங்கினார். அதை பார்த்த கயல்விழியோ இன்னும் கொஞ்ச நாள் தானே மாமா, அழாதே என்று எதார்த்தமாக பேசினார். பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஃப்ரீஸாக இருக்காமல் மனைவியுடன் அறையில் இருந்து வெளியே சென்றார் சென்றாயன்.

விதிமீறல்

விதிமீறல்

ப்ரீஸில் இருந்த மும்தாஜ் பிக் பாஸ் பேச்சை மீறி உள்ளே சென்று வளையல் எடுத்து வந்து கயல்விழிக்கு போட்டுவிட்டார். சென்றாயனின் அப்பா மும்தாஜை வாழ்த்தினார். சென்றாயனின் அம்மாவோ ஐஸ்வர்யா தனது அம்மா இறந்துவிட்டதாக சொன்ன பொய்யை உண்மை என்று நம்பி நான் இருக்கேன் தாயி என்று ஆறதல் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X