Yuvan :சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல இசையமைப்பாளர்.. அட இவரா?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக சிறப்பான பல எபிசோட்களை ஒளிபரப்பி வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல இந்த சீசனையும் மிகவும் சிறப்பாக்கும் முயற்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இறங்கியுள்ளனர்.

சூப்பர் சிங்கர்ஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இணையும் யுவன் :விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக சூப்பர் சிங்கர்ஸ் காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 8 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கடந்த சீசனில் ஸ்ரீதர் சேனா டைட்டிலை வெற்றி கொண்டார். பரத் கே ராஜேஷ் முதல் ரன்னர் அப்பாகவும் அபிலாஷ் வெங்கடாசலம் இரண்டாவது ரன்னர் அப்பாகவும் வெற்றி கொண்டனர். வழக்கம் போல இந்த சீசனையும் பிரியங்கா மற்றும் மாகாபா இணைந்து தொகுத்து வழங்கினர்.
இந்த சீசனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலியிலும் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள சிங்கிங் லேடண்ட்களை கண்டறிவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக காணப்படுகிறது. நிகழ்ச்சியின் நடுவர்களாக பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் தொடர்ந்து கலக்கி வருகின்றனர்.

தற்போது 9வது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் டாப் 5 போட்டியாளர்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த பிரபலங்களை களமிறக்கி வருகிறது விஜய் டிவி. பாக்கியராஜ், டி ராஜேந்தர் உள்ளிட்டவர்கள் கடந்த வாரங்களில் வந்த நிலையில், கடந்த வாரத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இந்நிலையில் வரும் வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிகழ்ச்சியின் அரையிறுதி சுற்றலாக அமையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் இணைந்தது குறித்து யுவன் சங்கர் ராஜா உற்சாகம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இணைவதற்கு தான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறப்பான குரல் தேடல்களை தொடர்ந்து செய்துவரும் இந்தி நிகழ்ச்சியை தொடர்ந்து தான் பார்த்து வருவதாகவும் தன்னை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செலக்ட் செய்த நடுவர்களுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த வாரத்தில் வித்யா சாகர் கலந்துக் கொண்ட ஷோ, சிறப்பாக களைகட்டியது. இந்நிலையில் தமிழ்நாட்டின் சிறப்பான மற்றும் முன்னணி இசையமைப்பாளர் யுவன் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











