இனி யார் ஓடுனாலும்.. அது நீ ஓடுன பாதை.. பணப்பெட்டியை தூக்கிய முத்துக்குமரன்.. பாராட்டிய ஆனந்தி!

சென்னை: கமல்ஹாசன் விலகிய நிலையில், இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வெற்றிகரமாக இறுதிக்கட்டம் வரை நிகழ்ச்சியை சில விமர்சனங்களுடன் கொண்டு சென்று வந்துவிட்டார். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார், ரன்னர் அப் யார் என்பது தெரிந்துவிடும்.

இந்நிலையில், அதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்குள் வைக்கப்பட்ட பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறப்போவது யார் என்பதை காண ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்த முறை செம ட்விஸ்ட்டாக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் 15 நொடிகளுக்குள் வரும் நபர் பணப்பெட்டியுடன் போட்டியையும் தொடரலாம் என்கிற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

muthukumaran bigg boss tamil 8 rj anandhi

டைட்டில் வின்னர் என கருதப்பட்டு வரும் முத்துக்குமரன் பணப்பெட்டியை எடுக்க முயற்சித்த போது இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என பலரும் நினைத்த நிலையில், வெற்றிகரமாக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து புதிய சாதனையை படைத்து அசத்திய அவரை ஆர்.ஜே. ஆனந்தி பாராட்டியுள்ளார்.

பணப்பெட்டியை தூக்கிய முத்துக்குமரன்: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டிலை நிச்சயம் முத்துக்குமரன் தான் வெல்வார் என அவரது ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், திடீரென வெறும் 50 ஆயிரம் பணப்பெட்டிக்காக முத்துக்குமரன் எடுத்த ரிஸ்க்கை பார்த்து பலரும் ஷாக் ஆகிவிட்டனர். 30 மிட்டரில் வைக்கப்பட்ட பணப்பெட்டியை 15 நொடிகளுக்குள் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தால் பணப்பெட்டியும் கிடைக்கும் போட்டியிலும் தொடரலாம் என்கிற புதிய கேம் வைக்கப்பட்ட நிலையில், அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் முத்துக்குமரன்.

12 நொடிகளில்: டைமர் ஆரம்பித்ததும் முத்துக்குமரன் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். தன்னுடைய மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் 12 நொடிகளுக்குள் வந்து முத்துக்குமரன் சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் கடைசி நேரத்தில் அவருக்கு ஏகப்பட்ட மக்கள் ஓட்டுக்களை போடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

muthukumaran bigg boss tamil 8 rj anandhi

ஆர்ஜே ஆனந்தி பாராட்டு: "இனி யார் ஓடுனாலும்.. அது நீ ஓடுன பாதை" என முத்துக்குமரனுக்கு ஆர்ஜே ஆனந்தி பாராட்டு தெரிவித்த நிலையில், அதை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து முத்துக்குமரனின் விளையாட்டை பிரம்மித்து வருகின்றனர். செளந்தர்யா போல சீன் காட்டி இதுவரை வரவில்லை என்றும் கடைசி வரை சாதனை நாயகன் முத்துக்குமரன் கண்டிப்பாக இந்த சீசன் டைட்டில் வின்னரும் இவர் தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X