சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணன் அக்கா பொண்ணு சவுந்தர்யாவின் பிறந்த நாளை வெகு விமர்சையா கொண்டாடிகிட்டு இருக்காங்க.
கண்ணன் முத்துசெல்விக்கு லவ் லெட்டர் எழுதியது போல, சவுந்தர்யாவின் அக்காக்கள் ரெண்டு பேரும் லெட்டர் எழுதி அவளோட டிரஸ் பைக்குள்ள வச்சுடறாங்க.
லெட்டரில் என்ன எழுதி இருக்குன்னு பார்த்தா, சவுந்தர்யாவின் பர்த் டே அன்னிக்கு எல்லார் முன்னாலயும் என் கன்னத்துல பச்சைக் பச்சக்னு முத்தம் தரணும்னு சின்னவரு எழுதி இருப்பது போல எழுத்திடறாங்க

கோலாகலம்
சவுந்தர்யாவின் பார்த்த டே கோலாகலம் நடந்துக்கிட்டு இருக்கு. எப்படியாவது சவுந்தர்யாவையும், ஆகாஷையும் பேச வைக்கணுமேன்னு கண்ணன் கன்னத்துல விரலைத் தட்டிகிட்டு யோசிக்கறான்.

கன்னத்தை தட்டி தட்டி
ஆத்தி கன்னத்தை தட்டி தட்டி காமிச்சு முத்தம் கேட்கறாரே என்ன செய்வேன்னுமுத்துச்செல்வி தவிக்கறா. அதுக்குள்ளே தங்கச்சி தங்கம் இருக்காளே..அவ அக்கா ஓவ்வொண்ணும் உனக்கு சொல்லித் தரணுமா..போக்கா போக்கான்னு தள்ளி விடுது.

அந்த பச்சக்
அவ சின்னவரு கிட்ட போயி நிக்கறா...என்ன புள்ளேன்னு கேட்கறார் சின்னவரு.என்ன சொல்ல வந்த முத்து செல்வின்னு சவுந்தர்யா கேட்க, சின்னவரு சட்டையை புடிச்சு இழுத்து ரெண்டு கன்னத்துலயும் பச்சக் பச்சக்னு முத்தம் தர்றா.

பொளேர்னு கன்னத்துல
எல்லாரும் ஸ்தம்பிச்சு நிக்க, கண்ணன் அக்கா விஜயலட்சுமி அம்மா வந்து பொளேர்னு கன்னத்துலஒரு அறை விடறாங்க. சீ பொண்ணாடி நீ..எல்லோரும் கூடி இருக்க இடத்துல இப்படி கேடு கெட்டத்தனமா நடந்துக்கறே..வெளியில போடின்னு சொல்றாங்க...
ஆனா, ஒண்ணுங்க..ஒண்ணுந் தெரியாத முத்து செல்விக்கு சின்னவரின் சட்டை காலரை பிடிச்சு இழுத்து பச்சக் பச்சக்னு முத்தம் மட்டும் நல்லா குடுக்க தெரியுதுங்க...


Click it and Unblock the Notifications











