விஜய் டிவியில் நான் அழுதது நிஜம்: சிம்பு

By Mayura Akilan

விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியில் பப்லு உடன் நான் சண்டையிட்டதும், அழுததும் நிஜம்தான் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடிகர் பப்லு என்ற பிரிதிவிராஜ் நடனமாடிய போது நடுவராக வந்த சிம்பு அவரை சீண்டினார். இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது எனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறி தேம்பி தேம்பி அழுதார்.

இது டிஆர்பிக்காக போடப்பட்ட பொய் சண்டை என்று பேசப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து இது பொய் சண்டைதான் பேசி வைத்து போடப்பட்ட சண்டைதான் என்று சில வாரங்களுக்கு முன்பு பிரிதிவிராஜ் கூறினார்.

பதில் சொன்ன சிம்பு

பதில் சொன்ன சிம்பு

இது குறித்து சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்பு, "எனது கோபம் நிஜம்" என்று பதில் கூறினார்.

எனக்கு தெரியாது

எனக்கு தெரியாது

"அவரு பேசி வைச்சு பண்ணியிருக்கலாம். அவர்கிட்ட பேசி, இந்த மாதிரி சொல்லு அப்படினு சொன்னாங்களா என்று எனக்கு தெரியாது. அது அவரோட பெர்சனல்.

நிஜ சண்டைதான்

நிஜ சண்டைதான்

என்கிட்ட தொலைக்காட்சி தரப்பில் இருந்து அந்த மாதிரி எதுவுமே சொல்லவில்லை. அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், 'இந்த மாதிரி நடந்ததே... அதை போடட்டுமா?' அப்படினு கேட்டு தான் ஒளிபரப்பினாங்க.

என் கோபம் நிஜம்

என் கோபம் நிஜம்

என்னோட கோபம் நிஜம். பப்லு ஏதாவது காமெடியாக சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்" என்கிறார் சிம்பு. இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் இந்த அக்கப்போர் என்று தெரியவில்லையே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X