twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் மென்மையானவள்… சீரியல் நடிகை சந்திரா லட்சுமணன்

    By Mayura Akilan
    |

    ஜி தமிழ் தொலைக்ககாட்சியில் ஒளிபரப்பாகும் "துளசி' தொடரில் துளசியாக வந்து நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் சந்திரா லக்ஷ்மனன் திரைத்துறைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் மலையாளப் படங்கள், தொடர்களில் நடித்தவர் கடந்த ஐந்து வருடங்களாக தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    சன் டிவியில் சொந்த பந்தம் தொடரில் நடித்தவர் திடீரென அதில் இருந்து காணாமல் போய்விட்டார். ஏன் என்ற கேள்வியோடு அவரை தொடர்பு கொண்டோம். கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

    நடிக்க வந்தது விபத்து

    நடிக்க வந்தது விபத்து

    ஹோட்டல் மெனேஜ்மண்ட் படிக்கும் சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் ட்ரெயினிங் பார்த்தேன். அங்கே வந்த சினிமாத்துறையைச் சேர்ந்த ஒருவர், என்னை நடிக்க அழைத்தார்கள். எனக்கு பிலிம் பேக் ரவுண்ட் கிடையாது. யார்கிட்ட கேட்பதுன்னு தெரியல. அதனால சாமி முன்னாடி சீட்டு குலுக்கிப் போட்டு பார்த்தோம். அதில் நடிகைன்னு வந்தது. பிறகு தான் இந்த பீல்டுக்கு வந்தேன். மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடித்திருக்கிறேன். மலையாள படங்களில் நடித்திருக்கிறேன். சினிமா தவிர நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன்.

    நல்ல பேனர் படங்கள்

    நல்ல பேனர் படங்கள்

    தில்லாலங்கடி படத்திற்கு பிறகு நிறைய படத்திற்குக் கூப்பிட்டார்கள். நடிப்பதற்கு ஆசையும் இருக்கிறது. ஆனால் நல்ல பேனர்ல நல்ல கேரக்டராக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக லீட் ரோல்தான் பண்ணுவேன் என்று கிடையாது.

    கிளாமராக நடிக்க மாட்டேன்

    கிளாமராக நடிக்க மாட்டேன்

    ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப செல்க்டீவ்வான கேரக்டர்ஸ் தான் நான் பண்றேன். ஒரு எக்ஸ்பிரிமண்ட்டான கேரக்டரா இருக்கணும். எல்லாவிதமான கேரக்டரும் பண்ணனும். அப்போ தான் ஒரு ஆர்டிஸ்ட்டா கம்ப்ளீட் ஆவதாக அர்த்தம்.

    ஒரு படத்தில் நடித்தால் அதில் என்னை ஆடியன்ஸ் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மாதிரி ரோல் பண்ணனும். கிளாமர் எல்லாம் எனக்கு சரியாக வராது. அதனால பெரியதிரையில் அவ்வளவாக முயற்சிகள் செய்வதில்லை.

    நான் மென்மையானவர்

    நான் மென்மையானவர்

    நான் பேஸிக்காவே ரொம்ப சாப்ட்.மலையாளத்தில் என் முதல் படம் பிரித்விராஜ் கூட பண்ணினேன். அதில் ரொம்ப மென்மையான கன்னிகாஸ்திரி ரோல் பண்ணினேன். அதை தொடர்ந்து உடனே ஒரு சீரியல்ல பக்கா நெகட்டீவ் ரோல் வந்தது. அதுக்கு முன்னாடி ரொம்ப மென்மையா பார்த்துவிட்டு உடனே அப்படி ரொம்ப ஹார்டான கேரக்டர்ல பார்க்கும் போது எல்லாரும் அப்ரிஷியேட் பண்ணிணாங்க.

    அதைத் தொடர்ந்து ஒரு சீரியல் சைக்கோவா பண்ணினேன். சினிமா சீரியல்ன்னு வித்தியாசம் எதுவும் நான் பார்க்கறதில்லை. என்ன கேரக்டர் பண்றேன் என்பதுதான் முக்கியம்.

    கால்சீட் பிரச்சினை

    கால்சீட் பிரச்சினை

    சன் டிவியில் சொந்த பந்தம் தொடரின் நாயகியாக நடித்தேன். பெரிய பேனர், நல்ல கதைதான் சொந்தம் பந்தம். ஆனால் தெலுங்கு, தமிழ் சீரியல்கள் டேட்ஸ் பிரச்னையால் அதில் தொடரமுடியாமல் போய்விட்டது எனவே வெளியேறிவிட்டேன்.

    நடனமாட நேரமில்லை

    நடனமாட நேரமில்லை

    நான் பத்தாவது படிக்கும் வரை நடனமாடினேன். . என்னோட முதல் டான்ஸ் குரு நடிகை சாந்தி கிருஷ்ணா. அரங்கேற்றம் பண்ணவில்லை அதிகமா கற்றுக்கொண்டேன் அப்புறம் நேரமில்லாமல் பத்தாவது படிக்கும் போதே நிறுத்திவிட்டேன்.

    ரியாலிட்டி நிகழ்ச்சி

    ரியாலிட்டி நிகழ்ச்சி

    சீரியல்களுக்காக சென்னை, ஆந்திரா என்று மாறி மாறி போய் வருவதால் ரியாலிட்டி ஷோக்களில் நடனமாட நேரமில்லை. முன்பு விஜய் டிவி "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சிக்காக நானும் பிரஜனும் கலந்து கொண்டு பிராக்டிஸ் செய்ய நேரம் கிடைக்காமல் முதல் ரவுண்டிலேயே வெளியேறிவிட்டோம்.

    போட்டோகிராபர் ஆக ஆசை

    போட்டோகிராபர் ஆக ஆசை

    டெக்னிக்கல் சைட் எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே போட்டோ கிராபி ரொம்ப பிடிக்கும். அந்த பீல்டில் வரதான் ஆசை.சினிமாட்டோகிராபி வரலாம். டைரக்ஷன் பிடிக்கும். அந்தளவிற்கு எனக்கு திறமை இருக்கான்னு தெரியலை. ஆசை இருக்கு பார்க்கலாம் என்று கூறிவிட்டு சிரித்தார். ஆசையும், கனவும் நிறைவேற வாழ்த்து கூறிவிட்டு நாமும் கிளம்பினோம்.

    English summary
    Chandra Lakshman is a TV actress. She debuted in the 2002 Tamil film Manasellam. She is probably best known for her performances as Ganga and Divya in the TV series Kolangal and Kadhalikka Neramillai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X