டாக்டரேட் ஆகணுமாம்...! – இது சொர்ணமால்யா கனவு

By Mayura Akilan

Sornamalya
'இளமை புதுமை'யில் தொடங்கிய சொர்ணமால்யாவின் சின்னத்திரை வாழ்க்கை 'தங்கம்' வரை தொடர்கிறது. அவ்வப்போது திரைப்படங்களில் எட்டிப்பார்த்தாலும் டான்சராக இருப்பதும், டாக்டரேட் படிப்பும்தான் தன்னுடைய லட்சியம் என்கிறார் சொர்ணமால்யா.

அவர் கூறுகையில்...

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பை என்​னு​டைய பதி​னாறு வய​தில் தொடங்​கி​னேன் என்​னு​டைய வளர்ச்​சி​யோட சேர்ந்து அந்த நிகழ்ச்​சி​யும் வளர்ந்​தது. சொர்ணமால்யா என்​றால் யார் என்று என்னை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது இளமை புதுமை நிகழ்ச்சி தான். நான் அந்த நிகழ்ச்​சியை தொடர்ந்து ஏழு வரு​டங்​கள் பண்​ணி​னேன். நிறைய நல்ல நல்ல விஷ​யங்​கள் எல்​லாம் நடந்​தது. ஒரு விஷ​யம் நன்​றாக நடக்​கும் பொழுது சில நேரங்​க​ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்​படி தான் அந்த நிகழ்ச்​சியை ​ ரொம்ப சந்​தோ​ஷ​மான சூழ்​நி​லை​யில் தான் முடித்​தோம்.

சினி​மா​வுக்​கும்,​ சின்​னத்​தி​ரைக்​கும் இருந்த வித்​தி​யா​சங்​கள் இப்​போது போய்​விட்​டது. இன்றைய சூழ்​நி​லை​யில் சினி​மா​விற்கு பல​மாக இருப்​பது சின்​னத்​திரை தான். சினிமாவோ சின்னத்திரையோ எனக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். சினிமாவில் "மொழி' ​ படம் போல ஒரு ​ நல்ல படத்தில் நடித்​தால் பத்து சுமா​ரான படங்​களில் நடிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது. அது போல் வராத பட்​சத்​தில் பத்து சுமா​ரான படங்​கள் நடிக்க எனக்கு நேரமோ,​ விருப்​பமோ இல்லை.

நெகடிவ் ரோல்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நெகட்​டீவா ​ பண்​ணி​னா​லும் அதில் ஒரு அர்த்​தம் இருக்க வேண்​டும். இயல்​பான நெகட்​டீவ் ரோலாக இருந்​தால் பர​வா​யில்லை. கத்தி எடுத்து ​குத்​து​வது மாதிரி எல்​லாம் நான் செய்ய முடி​யாது. ​ ஏன் என்​றால் என்​னி​டம் நாட்​டி​யம் கற்​றுக்​கொள்ள நிறைய பிள்​ளை​கள் வரு​கி​றார்​கள். அது ​ மட்​டு​மல்​லா​மல் நான் நிறைய சோஷி​யல் ஒர்க்​கி​லும் ஈடு​பட்​டுக் ​ கொண்​டி​ருக்​கி​றேன். அது நிஜ​வாழ்க்​கை​யில் எந்த பாதிப்​பை​யும் ஏற்​ப​டுத்​தக் கூடாது என்​ப​தால் எனக்கு இஷ்​டம் இல்லை. ​ ​ரொம்ப பெரிய கம்​பெ​னி​யில் இருந்து ​ வில்​லி​யாக நடிப்​ப​தற்கு கேட்​டார்​கள். நல்ல கம்​பெனி,​ நல்ல டைரக்​டர்,​ ரொம்ப நல்ல கதை இருந்​தா​லும் அவர்​க​ளோடு ஒர்க் பண்ண முடி​ய​வில்​லையே என்று வருத்​தப்​பட்​டேன்.

காஞ்சிபுரத்தில் நாட்டியப் பள்ளி

ஒரு நாளில் இரு​பத்​தி​நாலு மணி நேரம் இருக்​கி​றது. அதை வைத்​துக் கொண்டு எத்​த​னையோ நிறைய நல்ல விஷ​யங்​களைச் செய்​ய​லாம். படிப்​புக்​காக டான்ஸை விட்​ட​தில்லை,​ டான்ஸ்​காக நடிப்பை விட்​ட​தில்லை,​ ​ ஒவ்​வொன்​றுக்​கும் என் நேரத்​தைப் பிரித்து செயல்படு​கி​றேன். இது​தான் என் பங்​க​ளிப்​புன்னு சொல்லி முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாது. இப்​போ​து தான் ஆரம்​பித்​தி​ருக்​கி​றேன். நிறைய விஷ​யங்​கள் செய்​ய​ணும்னு ஆர்​வம் இருக்கு. அதற்​கான முயற்​சி​க​ளில் ஒன்று தான் பிஎச்.டி. பட்​டம் வாங்க வேண்​டும் என்​பது. என் மூல​மாக சில விஷ​யங்​க​ளைக் கலை உல​கத்​துக்​குக் கொடுக்க வேண்​டும் என்​பது என் ஆசை. இதை தவிர சென்​னை​யி​லும்,​ காஞ்​சி​பு​ரத்​தி​லும் நாட்​டிய பள்ளி வைத்து நடத்​திக் கொண்​டி​ருக்​கி​றேன்.

தொடர் இயக்​கு​வ​தற்கு நிறைய ​ நேரம் வேண்​டும். ஆனால் ​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X