கணவர் சஞ்சீவ்தான் சப்போர்ட்: ப்ரீத்தியின் ஆனந்தம்
சின்னத்திரையில் ப்ரீத்திக்கு தனி இடம் உண்டு. சித்தி தொடங்கி பந்தம் வரை பல கதாபாத்திரங்களில் நடித்து இல்லத்தரசிகளின் இதயங்களில் இடம் பிடித்தவர். திருமணம், குழந்தை என செட்டில் ஆன அவர் குழந்தைக்கு விபரம் தெரிய ஆரம்பித்த உடன் மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸ்சினை ஆரம்பித்திருக்கிறார்.
காதல் கணவர் சஞ்சீவ் உடனான வாழ்க்கை, குழந்தையின் மழலை பேச்சு இவற்றிற்கிடையே மீண்டும் சின்னத்திரை சீரியலில் பிசியாகிவிட்டார்.
சன் டிவியில் 'பொம்மலாட்டம்', ஜெயா டிவியில் 'மனதில் உறுதி வேண்டும்' என இரண்டு தொடர்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகிறார். தன்னுடைய ரீ என்ட்ரி பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார் ப்ரீத்தி.

விளையாட்டாய் காதல்
சஞ்சீவும், நானும் எந்த தொடரிலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனாலும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வோம். அதுவே நாளடைவில் நட்பாகி பின்னர் காதலாகிவிட்டது.

சஞ்சீவ் விசிறி நான்
என்னுடைய கணவர் சஞ்சீவின் தீவிர விசிறி நான். அதுவே காதலாக மாறியதில் சந்தோசம். எங்களின் வீட்டுக்கு தெரிந்த உடன் பச்சைக் கொடி காட்டினார்கள் 2009 மார்ச்சில் திருமணம் செய்து கொண்டோம்.

குழந்தை லயாவின் குதூகலம்
என் குழந்தை லயாவின் வருகை எங்களுக்கு குதூகலம் தருகிறது. அவளுக்காகவே சூட்டிங் முடிந்து வேகமாக வீட்டுக்குப் போய்விடுவேன். தினமும் அவளுடைய ஒவ்வொரு அசைவினையும் போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறோம்.

செகண்ட் இன்னிங்ஸ்
மூன்றரை வருஷத்துக்கு பிறகு இப்போ சன் டி.வி 'பொம்மலாட்டம்', ஜெயா டி.வி 'மனதில் உறுதி வேண்டும்'னு மறுபடியும் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். இரண்டுமே நல்ல கதாபாத்திரங்கள் சந்தோஷமா ஆரம்பிச்சிருக்கு இந்த செகண்ட் இன்னிங்ஸ்!

பாஸிட்டிவ் - நெகடிவ்
இந்த இரண்டு தொடருமே ஒரே நாள்ல ஒப்பந்தமான தொடர்கள். 'பொம்மலாட்டம்' தொடர்ல மாடர்ன் டிரெஸ்ல நெகட்டிவ் ரோல்ல வருவேன். அதுவே 'மனதில் உறுதி வேண்டும்' தொடர் முழுக்க புடவை கட்டி பாஸிட்டிவ் ரோல்

கணவர்தான் முழு சப்போர்ட்
நடிகையாக, அன்பான மனைவி, அக்கறையான அம்மாவாக ஒவ்வொரு கட்டத்திலும் என் பொறுப்புகளை நிறைவா செய்கிறேன். கணவர் சஞ்சீவ், இதில் எல்லாம் என்னோட பெரிய பலம். குழந்தை லயாவுக்கு இப்போ மூணு வயசு ஆகுது. அழத் தெரியாத சமர்த்துக் குழந்தை! என்று கூறிவிட்டு அழகாய் சிரித்தார் ப்ரீத்தி.


Click it and Unblock the Notifications











