என் சவுண்டு என் உசிரில் பாதி புள்ள... கலங்கும் கண்ணன்!

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவுக்கு மோட்டார் பம்ப் செட்டில் கரண்ட் ஷாக் அடிச்சு உயிருக்கு போராடிகிட்டு இருக்கா.

உடலில் ஒரு அசைவும் இல்லாமல், மூச்சும் விடாத சமயத்தில் கண்ணன் சவுந்தர்யாவின் நெத்தியில் முத்தமிட ஈசிஜி வேலை செய்ய ஆரம்பிக்குது.

மருத்துவர்கள் இதை சவுந்தர்யாவின் அம்மா அப்பாவிடம் சொல்ல... மிரண்டு போகிறாள் சின்னவர் கண்ணனை கட்டிக்க இருக்கும் முத்துச்செல்வி.

இதுல தப்பு என்னங்க?

இதுல தப்பு என்னங்க?

நினைச்சு பாருங்க... கண்ணன் மனசுல சவுந்தர்யாதான் இருக்கான்னு நான் சொன்னதில தப்பு என்னங்க இருக்கு.கண்ணன் முத்தம் கொடுத்துதான் சவுந்தர்யாவுக்கு உசுரு வந்துச்சுன்னு டாக்டர் சொன்னதுக்கு இதுதானே அர்த்தம். அவ மனசுல இவனும்,, இவன் மனசுல அவளும் இருக்கறது உண்மை...அதைத்தானே நான் சொன்னேன்னு விஜயலட்சுமி அம்மா சொல்றாங்க. கண்ணன் அப்போது இல்லை.

கண்ணனிடம் முத்து செல்வி

கண்ணனிடம் முத்து செல்வி

கண்ணன் மாயனின் கையை வெட்டிட்டு வந்ததும் இப்படி செய்யலாமா கண்ணா... உனக்குத் தெரியாதான்னு மாமா கேட்கறார். என் சவுண்டுக்கு ஷாக் அடிச்சுதுன்னு தெரிஞ்சுக்கிட்ட உடனே எனக்கு புத்தி எல்லாம் சவுண்டு மேலதான் மாமா இருந்துச்சு.அவன் உசிரை எடுத்து இருக்கணும்னு சொல்றான்.

ஸ்டேஷன் வரைக்கும்

ஸ்டேஷன் வரைக்கும்

கண்ணா போலீஸ் உன்னைத் தேடி வந்தாங்க...நீ ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வான்னு சொல்றார் மாமா... அக்கா நீ அழாதேக்கா... சவுண்டுக்கு ஒண்ணும் ஆகாது...அவ என்னை விட்டு அவ்ளோ சீக்கிரம் போயிட மாட்டான்னு சொல்றான். முத்து இங்க இருக்கறவங்க சவுண்ட பார்த்துக்குவாங்க. நீ வா... உன்னை வீட்டுல விட்டுடறேன்னு சொல்லி அவளை அழைச்சுகிட்டு போறான்.

முத்து செல்விக்கு இப்போதான்

முத்து செல்விக்கு இப்போதான்

கண்ணன் அழறதை பார்த்தது... கண்ணனின் அக்காவும், மாமாவும் பேசிக்கிட்டது எல்லாமே முத்து செல்விக்கு உள்ளே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துது. சின்னவரே சவுந்தர்யா அம்மா மேல உங்களுக்கு பாசம் அதிகம்தான்... ஆனா,நீங்க அழுததைப் பார்த்து எனக்கு எவ்ளோ சங்கடமா போச்சு தெரியுமான்னு முத்துச்செல்வி சொல்றா.

அன்பு மட்டும் இல்லை

அன்பு மட்டும் இல்லை

இது வெறும் அன்பு மட்டும் இல்லை புள்ள.. என் சவுண்டு என் உசுருல பாதி.காலையில எழுந்திரிச்சு அவ முகத்தை பார்ப்பேன்.. படுக்கும்போது தூக்கம் வருது சவுண்டு...தூங்க போறேன்னு சொல்லிட்டுத்தான் தூங்குவேன்னு மறுபடியும் அழறான்.

உங்க உசிரில் பாதிதான் சவுந்தர்யா அம்மா சின்னவரே...ஆனா,என் உசிரே நீங்கதான் சின்னவரேன்னு அழறா முத்துச்செல்வி. இப்போ அழுது என்ன பிரயோஜனம்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X