டிவி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு... நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்
சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் பிரிவோம் சந்திப்போம், ஈரம், சென்னையில் ஒருநாள், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை லட்சுமி ராமக்கிருஷ்ணன். மலையாளப் படங்களிலும் நடித்துள்ள இவர், ஆரோகணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது நெருங்கிவா முத்தமிடாதே என்ற படத்தை இயக்கி வருகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளதாம். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டதற்கு எதிராக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments


Click it and Unblock the Notifications