'சம்மர் ஹாலிடேஸ்'.. டிவியில் புராணத் தொடர்களை ரசிக்கும் குட்டீஸ்கள்

By Mayura Akilan

கோடை விடுமுறை விட்டதும் குட்டீஸ்கள் எல்லோரும் டிவியை ஆக்கிரமித்துக் கொண்டனர். எங்க ஏரியா உள்ளே வராதே என்பது போலத்தான் ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்கின்றனர்.

சுட்டி டிவி தொடங்கி சித்திரம், கார்ட்டூன் நெட் ஒர்க், போகோ, நிக், டிஸ்கவரி கிட்ஸ் என எக்கச் சக்க சேனல்களை மாத்தி மாத்தி போட்டு பொழுதை கழித்து வருகின்றனர்.

அடிக்கிற வெயிலுக்கு வெளியே போய் விளையாட பயந்து கொண்டு வீட்டிற்குள் சேனலே கதி என்று கிடக்கும் குட்டீஸ்கள் அப்படி என்னதான் பார்க்கின்றனர் என்று பார்வையை ஓட்டியதில் சிக்கியவை இவை.

சோட்டா பீம்

சோட்டா பீம்

மகாபாரதத்தின் பீமன் தெரியும், அதென்ன ‘சோட்ட பீம்' என்பவர்களுக்கு வேறொன்றுமில்லை சிறு வயது பீமன்தான் சோட்ட பீம். குட்டி பீமன் செய்யும் சாகசங்களை ரசிக்கின்றனர். பீமனுடன் கிருஷ்ணா, இவர்களுடன் கணேசா, ஹனுமான் எல்லோரும் வருகின்றனர்.

பால கணேஷ்

பால கணேஷ்

பிள்ளையாரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுவும் பிள்ளையாரின் சரித்திரத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் குட்டீஸ்கள். கார்ட்டூன் நெட் ஒர்க் சேனலில் எத்தனை முறை போட்டாலும் பார்க்கின்றனர் குட்டீஸ்கள்.

ரோல் நம்பர் 21

ரோல் நம்பர் 21

கார்ட்டூன் நெட் ஒர்க் சேனலில் குட்டீஸ் பார்க்கும் மற்றொரு நிகழ்ச்சி ரோல் நம்பர் 21. இது கிருஷ்ணர், சாதாரண மாணவராக மாறி செய்யும் அட்டகாசங்கள் இடம் பெற்றுள்ளன.

ராமாயணம் பார்க்கிறோம்…

ராமாயணம் பார்க்கிறோம்…

செய்தி பார்க்கணும் கொஞ்சநேரம் ரிமோட் கொடுங்களேன் என்று கேட்டால் போதும், நாங்க ராமாயணம் பார்க்கிறோம். எங்களை டிஸ்டர்ப் செய்யாதீங்க என்கின்றனர். கார்ட்டூன் ராமாயணம் குட்டீஸ்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதோடு பால ஹனுமான், லவ குசா போன்றவை அவர்களின் பேவரைட் நிகழ்ச்சிகள்.

நிஞ்சா கட்டோரி

நிஞ்சா கட்டோரி

நிக் சேனல் பக்கம் போகும் பசங்கள் அங்கே நிஞ்சா கட்டோரி பார்க்கின்றனர். கெமமாகி, கெனிசி, சுசிமோ என இரவில் கூட புலம்புகின்றனர்.

திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்

சித்திரம் தொலைக்காட்சியை எப்போதாவது பார்க்கும் பிள்ளைகள், திருக்குறள் கதைகளையும், விக்ரமாதித்தன் கதைகளையும் பார்த்து ரசிக்கின்றனர் பிள்ளைகள்.

ஜாக்கிசான் கதைகள்

ஜாக்கிசான் கதைகள்

சுட்டி டிவியில் குட்டீஸ்களுக்கு பிடித்த கதை ஜாக்கிசான், ஆல் இன் ஆல் அழகு ராஜா என பார்த்து ரசிக்கின்றனர். இவர்கள் டிவி பார்க்க வந்த பின்னர் பெரியவர்கள் சீரியலோ, செய்தியோ பார்க்க முடிவதில்லை. ஸ்கூல் ஆரம்பித்த பின்னர்தான் பெரியவர்கள் டிவி பக்கம் போகமுடியும். அழுகை சீரியல்களை பார்த்து போர் அடித்துப் போனவர்கள் கொஞ்சம் கார்ட்டூன் சேனல்களைப் பார்த்து சிரிக்கலாமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X