இப்போதைக்கு தனியா சாப்பிடுறேன்.. தனியா சிரிக்கிறேன்.. சிங்கிளாக சிங்கிள் பீஸ் உடையில் சுற்றும் நாகினி!
மும்பை: சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் நடிகை நியா சர்மா, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதாகவும், தனது தினசரி வழக்கத்தில் பல மாற்றங்களைச் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 35 வயதாகும் நாகினி நடிகை நியா சர்மாவுக்கு திருமணம் இன்னமும் ஆகவில்லை. அவரது காதலும் பிரேக்கப் ஆகிவிட்டதா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக குஷால் டாண்டன் எனும் நடிகருடன் நியா சர்மா காதலில் விழுந்து விட்டார் என்றும் டேட்டிங் செல்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது வெறும் வதந்தி என மறுத்திருந்தார் நியா சர்மா.

இந்நிலையில், தற்போது சிங்கிள் பீஸ் உடையுடன் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இப்போதைக்கு தனியாக இருக்கிறேன், தனியாக சாப்பிடுறேன், தனியாக சிரிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
யூடியூப் சேனலில் ஹெல்தி டிப்ஸ்: நாகினி நடிகை நியா சர்மா தனது யூடியூப் வீடியோவில் ஏகப்பட்ட ஹெல்தி டிப்ஸ்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில், பீட்ரூட் பராத்தா தயாரிக்கும் போது, "ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான செய்முறை விளக்கத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். தேவையான பொருட்கள்: வேகவைத்து துருவிய பீட்ரூட், மசித்த உருளைக்கிழங்கு, கீரை, பிணைப்பிற்கு தேவையான ரவை, மற்றும் தண்ணீர் ஆகியவை இதில் அடங்கும் என்றார்.
சொந்த சமையல்: "நடிகைகள் பலருக்கும் கிச்சன் எங்கே இருக்கிறதே தெரியாது என ஜோக் அடிப்பார்கள், ஆனால், நான் வீட்டிலேயே சில மாற்றங்களைச் செய்து வருகிறேன். என் உணவை நானே சமைக்கிறேன். என் ஆரோக்கியத்தில் நான் கவனம் செலுத்துகிறேன். ஸ்மூத்திகள் அருந்த ஆரம்பித்துவிட்டேன்," என்று 35 வயதான நியா சர்மா மேலும் கூறினார். அதே போல உடல் நலத்தை பேணுவதிலும் வொர்க்கவுட் செய்து ஃபிட்டாக இருப்பதையும் எப்போதுமே விரும்பி வருகிறார்.
சிங்கிள் பீஸில் சிங்கிளாக சுற்றும் நியா சர்மா: பீச் ரெசார்ட்டில் நியா சர்மா ஒரு கூரை குடைக்குள் மோனோகினி உடையை அணிந்துக் கொண்டு நாக மோகினியாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அரண்டு போயுள்ளனர். மேலும், ஓபன் ஷவரில் குளிப்பது, கடற்கரையில் சிங்கிள் பீஸ் உடையில் விளையாடுவது போன்ற போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். மேலும் கேப்ஷனில், "Current Status: Eating alone... Chllin' alone .. Smiling Alone.. Living full Blown.." என பதிவிட்டுள்ளார். ரகசிய காதலருடன் பிரேக்கப் ஆகிவிட்டதா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











