Naam iruvar namakku iruvar serial: ரெண்டு பேருக்கும் ரெண்டு கல்யாணம் நடந்தும் இப்படியா?

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன், அரவிந்த் ரெண்டு பேரும் இரட்டை பிள்ளைகள். இருவருக்குமே கல்யாணம் ஒரே நாளில் நடந்தது. இதுவரை இருவருக்கும் முதலிரவு நடக்கவில்லை.

அரவிந்த் குஸ்தி வாத்தியாரின் நண்பர் வீட்டில் பச்சிளம் குழந்தையில் இருந்தே வளர்கிறான். இப்போது டாக்டராகி இருக்கான்.இன்னொரு பிள்ளையான மாயன் மட்டும் பெத்த அப்பா அம்மாவான குஸ்தி வாத்தியார்,செல்வியிடம் வளர்கிறான்.

அரவிந்துக்கு கல்யாணம் செய்து வைக்க இருந்த படித்த பெண்ணான தேவியை கடத்தி வந்து மாயன் கல்யாணம் செய்துக்கறான். மாயனுக்கு கல்யாணம் செய்ய இருந்த சுமாராக படித்த தாமரையை டாக்டர் அரவிந்துக்கு கட்டாய கல்யாணம் செய்து வைக்கறாங்க.

விவகாரத்துக்கு விண்ணப்பம்

விவகாரத்துக்கு விண்ணப்பம்

தேவி-மாயன், தாமரை-அரவிந்த் என்று இரு தம்பதியரும் கோர்ட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.மாயனுக்கு தேவியைப் பிடிக்கும், தேவிக்கு மாயனை பிடிக்காது. தாமரைக்கு அரவிந்தை பிடிக்கும், அரவிந்துக்கு தாமரையை பிடிக்காது.இதனால்தான் கோர்ட்டில் கேஸ் நடந்துகொண்டு இருக்கிறது. காலப் போக்கில் அரவிந்துக்கும் தாமரையை பிடித்துப் போகிறது.இதே போல தேவிக்கும் மாயனை பிடித்தும், குடும்பத்தார் கட்டாயத்தால் பிடிக்காமலும் என்று இருக்கிறது.

இருவருக்கும் முதல் ஆண்டு

இருவருக்கும் முதல் ஆண்டு

இரு தம்பதிக்கும் முதல் திருமண ஆண்டு வருகிறது. இருவருக்குள்ளும் நெருக்கம் இல்லை என்று உணர்ந்த குஸ்தி வாத்தியார்,பிள்ளைகளின் திருமண நாளை,திருமணம் போலவே கொண்டாட நினைக்கிறார். இருவரின் விவாகரத்து கேஸின் தீர்ப்பும் மூன்று நாட்களில் வரவுள்ளது. இருந்தாலும் குஸ்தி வாத்தியாரான தனது மாமனாரின் மீது வைத்திருக்கும் மரியாதையில், தேவி திருமண நாள் கொண்டாட்டத்துக்கு சம்மதிக்கிறாள்.ஆனால் ,அரவிந்தும், தாமரையும் ராசியாகி கேஸை வாபஸ் வாங்கிய நிலையில், இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு எடுக்கிறார்கள்.

அம்மா அரவிந்த்

அம்மா அரவிந்த்

அரவிந்தை எடுத்து வளர்த்த அம்மாவுக்கு, தாமரையை பிடிக்கவில்லை.இருந்தாலும் இந்த திருமண நாள் கொண்டாட்டத்துக்கு பிள்ளைக்காக சம்மதிக்கறாங்க. திருமண நாள் என்னடான்னா உண்மையான திருமணம் போலவே. ஐயர் வைத்து சடங்குகள் செய்து, மாலை மாற்றி கல்யாணம் போலவே நடக்குது. தேவிக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது போல இருந்தாலும், மனத்துக்குள் குழப்பம்.

அம்மா மாத்திரை

அம்மா மாத்திரை

ஒரு வழியாக முதலிரவு ஏற்பாடுகளும் செய்துவிட்டு, அவரவர் படுக்கச் சென்று விடுகிறார்கள். மாயனும், தேவியும் முதலிரவு இல்லை என்கிற முடிவில், மாயன் பால் பழம் மட்டும் சாப்பிட, இருவரும் எப்போதும் போல வாக்கு வாதம் செய்துட்டு, தூங்கிடறாங்க. தாமரையும், அரவிந்தும் செம மூடில் இருக்க, இவர்கள் இருவருக்குமாவது ஒரு வருடம் கழித்து முதலிரவு நடக்கும் என்று பார்த்தால்,, அரவிந்தின் வளர்த்த அம்மா தூக்க மாத்திரை குடிச்சுட்டு தற்கொலைக்கு முயற்சிக்கறாங்க.அரவிந்த் அவங்களை காப்பாற்றி கேட்டால், தாமரையை என்னால் மருமகளா ஏத்துக்க முடியலைன்னு அரவிந்த்கிட்ட மட்டும் தனியா சொல்றாங்க.

அரவிந்த் தாமரைக்கும் முதலிரவு நடக்கவில்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X