சன் டிவி தொடங்கிய பிரம்மாண்ட நிகழ்ச்சி.. ரூட்டை மாத்திய சிவாங்கி.. வெங்கடேஷ் பட் அடித்த கமெண்ட்!

சென்னை: மீடியா மேசன்ஸ் வழங்கிய சூப்பர் நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டிருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், வடிவேலு ஆகியோரின் படங்களில் நடித்தார். தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சிவாங்கி என்ட்ரி கொடுத்திருக்கும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பார்வையாளர்கள் விஜய் டிவிக்கு குட்பை சொல்லிட்டிங்களா என்றும் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சிவாங்கி அவர் புகழுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை சொல்லி மாள முடியாது. இருவரும் சேர்ந்து ரகளை செய்வார்கள். அரைமணி நேர நிகழ்ச்சியில்பாசமலர் படத்தையே பார்க்கலாம். அந்த அளவிற்கு அவர்கள் செய்யும் காமெடி கலைகட்டும். குக்வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து தனியாக ஆல்பம் பாடல்களுக்கும் நடனமாடி ரசிக்க வைத்திருந்தார். பின்பு வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் காமெடியில் கலக்கினார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்திலும் அவரது கதாப்பாத்திரம் கலகலப்பை ஏற்படுத்தியது.

naanum-rowdythan-a-new-show-airing-on-sun-tv

காதல் பிரேக் அப்: அடுத்தடுத்து லைன்அப்பில் இருக்கும் சிவாங்கி தொடர்ந்து படங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசி அவரது ரசிகர்களையும் அழவைத்தார் சிவாங்கி. ஆரம்பத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. அதில் இருந்து வெளியே வர மிகவும் கஷ்டப்பட்டேன். போக போக அது பழகிடுச்சு. ஆனால் ரொம்ப வலியாகவும் இருந்தது என கண்ணீரோடு சிவாங்கி தெரிவித்தார். இது ரசிகர்களுக்கும் ஷாக் அளித்தது. தற்போது சகஜமான நிலைக்கு மாறியிருக்கும் சிவாங்கி புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுப்பாளர் அஸ்வத்துடன் சேர்ந்து தொகுத்து வழங்க இருக்கிறார். அதுகுறித்த புரோமோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

நானும் ரவுடிதான்: சன் டிவயில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காட்டிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பகாலகட்டத்தில் தங்க வேட்டை, பெப்சி உங்கள் சாய்ஸ், டாப் டென் மூவிஸ் போன்ற நிகழ்ச்சிகள் மக்களிடையே அதிகளவில் ரீச் கிடைத்து ஹிட் அடித்தன. அதேபோன்று சன்டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது நானும் ரவுடிதான் என்ற புதிய நிகழ்ச்சி பிரம்மாண்ட முறையில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுதொடர்பான புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

naanum-rowdythan-a-new-show-airing-on-sun-tv

ஆரம்பிக்கலாமா: நானும் ரவுடிதான் நிகழ்ச்சியை சிவாங்கி, அஸ்வத் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியில் குட்டீஸ் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி டான்ஸ், பாட்டு என கலக்குகின்றனர். அது ஒரு பக்கம் போட்டியாளராக வெங்கடேஷ் பட், அன்னம் சீரியல் நடிகை அபி நட்சத்திரா ஆகியோர் பங்கேற்கின்றனர். அமர்க்களமாக தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது. சன் டிவி என்றாலே பிரம்மாண்டம் தான். இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சிவாங்கி மாஸ் என்ட்ரியுடன் வந்திருக்கிறார். அதனோடு புதுமையான விசயம் என்னவென்றால் பெரியவர்களோடு சிறுவர்கள் மோதுவது போன்று போட்டி இருப்பது இன்னும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகள் டீமின் தலைவர் சிவாங்கி வழிநடத்துகிறார். பெரியவர்கள் டீமை அஸ்வத் வழிநடத்துகிறார். அமர்க்களமான நிகழ்ச்சி தொடங்கியாச்சு பக்கா பொழுதுபோக்குதான் போங்க என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

FAQs
சிவாங்கி காமெடி நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X