நாதஸ்வரம் 1000: சிங்கில் ஷாட்டில் லைவ் ஆக அசத்திய திருமுருகன்

By Mayura Akilan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடர் வெற்றிகரமாக தனது 1000 மாவது எபிசோடை கடந்துள்ளது.

ஒரு படம் 100 நாள் ஓடினாலே கொண்டாட்டம்தான். இன்றைக்கு சீரியல்கள் 1000 எபிசோடை கடப்பதுதான் கொண்டாட்டம்.

மற்ற தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து எப்படி இந்த ஆயிரமாவது தொடரை வித்தியாசப்படுத்தி எடுக்கலாம் என்று யோசித்த திருமுருகன் காரைக்குடியில் இருந்து லைவ் ஆக உலகம் முழுவதும் ஒளிபரப்பிவிட்டார்.

4 ஆண்டுகளாக ஒலிக்கும் நாதஸ்வரம்

4 ஆண்டுகளாக ஒலிக்கும் நாதஸ்வரம்

சன் டிவியில் திரு பிக்சர்ஸ் திருமுருகன் இயக்கி நடிக்கும் "நாதஸ்வரம்" தொடர் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.

புதுமுக நடிகர்கள்

புதுமுக நடிகர்கள்

இந்த தொடரில் பெரும்பாலும் புதுமுக நடிகர் நடிகைகள் மட்டுமே நடித்து வருகின்றனர். காரைக்குடி, பள்ளத்தூர், தேவகோட்டை, அறந்தாங்கி போன்ற ஊர்களில்தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

1000 மாவது எபிசோட்

1000 மாவது எபிசோட்

நாதஸ்வரம் தொடர் கடந்த மார்ச் 5ம் தேதி 1000வது எபிசோட்டை நிறைவு செய்தது. நாதஸ்வரம் தொடரின் ஆயிரமாவது எபிசோட்டை சிறப்பிக்கும் வகையில் அன்றைய தினம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த 22 நிமிடங்கள்

அந்த 22 நிமிடங்கள்

மொத்தம் 22 நிமிடம் தொடர்ந்து விளம்பரம் இல்லாமல் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 20 கதாபாத்திரங்கள் நடித்த இந்த எபிசோடில் படப்பிடிப்பு தளத்திலேயே ரீ ரிக்கார்டிங் செய்யப்பட்டது சிறப்பம்சம்.

கின்னஸ் சாதனை முயற்சி

கின்னஸ் சாதனை முயற்சி

கின்னஸ் சாதனைக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில் சன் டிவி நிறுவனம் தொழில் நுட்ப ரீதியாக உதவி செய்தது. உலக தொலைக் காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் ஒரு தொலைகாட்சி நாடகத்தை நேரடி ஒளிபரப்பு செய்தது இல்லை. இந்த சாதனை சன் டிவியின் ஒத்துழைப்போடு இந்த சாதனை நிறைவேற்றப்பட்டது என்றார் தொடரின் இயக்குநர் திருமுருகன்.

அனைவருக்கும்

அனைவருக்கும்

இது ஒரு கின்னஸ் சாதனை முயற்சி என்று கூறிய திருமுருகன், நாதஸ்வரம் தொடர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும். இதில் பங்குபெற்ற அனைவருக்கும் கின்னஸ் சாதனைக்கான சான்று வழங்கப்படும் என்றார்.

 சிங்கில் ஷாட் எபிசோட்

சிங்கில் ஷாட் எபிசோட்

ஆயிரமாவது எபிசோடில் முக்கிய அம்சம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. கோபியின் தங்கை ராகினியைச் சுற்றித்தான் 1000மாவது எபிசோட் கதை அமைந்திருந்தது.

ராகினியை கொல்ல முயற்சி

ராகினியை கொல்ல முயற்சி

தன்னை அவமானப்படுத்திய ராகினிக்கு குறி வைத்த அவளின் முன்னாள் கணவன் ராஜேஸ், அவளை கொலை செய்யும் நோக்கோடு யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறான். அந்த நேரம் ராகினி திருமணம் செய்ய நினைக்கும் குகன் வரவே அவனை ஒருவழியாக சமாளித்து அனுப்புகிறாள்.

வீட்டிற்கு வந்த கோபி

வீட்டிற்கு வந்த கோபி

அப்போது திருப்பூரில் இருந்து கோபி மனைவி மலர், காஜா உடன் வீட்டிற்கு வருகிறான். அவர்களும் குடும்பத்துடன் கோவிலுக்கு கிளம்புகின்றனர்.

தற்கொலைக்கு தூண்டிய கணவன்

தற்கொலைக்கு தூண்டிய கணவன்

வீட்டை ராகினி பூட்டப்போகும் நேரத்தில் அவளது அப்பாவும், சித்தப்பாவும் வரவே பேசி விட்டு வீட்டிற்குள் போகிறாள் ராகினி. அப்போது கத்தியைக்காட்டி மிரட்டி தற்கொலை செய்யத் தூண்டுகிறான் ராஜேஸ்.

கத்தியால் குத்திய மயில்

கத்தியால் குத்திய மயில்

அந்த நேரம் அவளின் சித்தப்பா வர அவரையும் அடித்து மயக்கமடையச் செய்கிறான். இருவரையும் தேடிக்கொண்டு சொக்கலிங்கம் வரவே அவரை கத்தியைக் காட்டி கொல்ல முயற்சிக்கிறான். அப்போது மின்சாரம் தடை படவே கோபி ராஜேஸ் எதிரில் நிற்கிறான். ஆனாலும் அசராத ராஜேஸ், சொக்கலிங்கத்தின் கழுத்தில் கத்தியை வைக்கிறான். அப்போது அண்ணனைக் காப்பாற்ற ராஜேசின் வயிற்றில் குத்தி சாய்க்கிறார் மயில்.

பரபரப்பான திருப்பம்

பரபரப்பான திருப்பம்

ரத்த வெள்ளத்தில் கீழே சாய்கிறான் ராஜேஸ். தன்னைக் காப்பாற்ற தம்பி செய்த செயலை எண்ணி அழுகிறார் சொக்கலிங்கம். அதோடு 1000மாவது எபிசோட் நிறைவடைந்தது.

கொண்டாடிய குடும்பம்

கொண்டாடிய குடும்பம்

கடந்த 4 ஆண்டுகளாக ஒரே குடும்பமாக நடித்து வரும் நாதஸ்வரம் குடும்பத்தினர் இந்த நேரடி ஒளிபரப்பை வெற்றிகரமாக முடித்த உடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இயக்குநர் திருமுருகன் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X