800 வது எபிசோடை நோக்கி நாதஸ்வரம் … திடீர் திருப்பங்கள்

By Mayura Akilan

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர் 800 வது எபிசோடை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாக்கும் அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர்.

காரைக்குடி நகரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படமாக்கப்பட்டு வரும் நாதஸ்வரம் தொடருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இன்னும் பரபரப்பான திருப்பங்களை நோக்கி நகர்கிறது நாதஸ்வரம் தொடர்.\

காது குத்து விழா கலாட்டா

காது குத்து விழா கலாட்டா

கோபியின் தங்கை மகேஷ் மகன் காது குத்து விழாவை அண்ணி மலரை அவமானப்படுத்துகிறாள் மகேஷ். இதற்கு மலரின் தாய் மாமன் வந்து சத்தம் போட்டுவிட்டுப் போகிறான்.

வாழ விடமாட்டேன்

வாழ விடமாட்டேன்

இதனால் கோபப்படும் மலரின் மாமியார், இனி அவளை வீட்டில் வாழ விடமாட்டேன் என்று கோபத்தோடு சொல்லிவிட்டுப் போகிறாள்.

அதிரடி திருப்பம்

அதிரடி திருப்பம்

மலேசியாவில் கோபி குடும்பத்துக்கு அறிமுகமான பிரசாத், வேலைக்காக காரைக்குடி வருகிறான். அவன் வருகையைத் தொடர்ந்து கதையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் கதையை இன்னொரு விறுவிறுப்புக் கோணத்தில் கொண்டு போகிறது.

காணாமல் போன மகன்

காணாமல் போன மகன்

பிரசாத்தின் வருகையினால் ஏற்படும் பல கேள்விகள் தவிர்க்க முடியாதவை. அவன் யார்? காரைக்குடியில் காணாமல் போன சொக்கலிங்கத்தின் மூத்த மகனா? அல்லது மகாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறவனா? என்று பல கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போகிறது.

கோபி - பிரசாத்

கோபி - பிரசாத்

பிரசாத் இங்கே வந்து விட்டதால் அவனது பெற்றோரின் தற்போதைய நிலை என்ன? ஒருவேளை பிரசாத், சொக்குவின் வீட்டு வாரிசு என்பது உறுதிப்பட்டால் அதுவரை அவனை வளர்த்து உருவாக்கிய பெற்றோர் விட்டுக் கொடுப்பார்களா? கோபி-பிரசாத் நட்பு நீடிக்குமா? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்.

மனம் மாறிய நீலாவதி

மனம் மாறிய நீலாவதி

இது ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க, இங்கே நீலாவதி மனம் மாறி காமுவின் வளைகாப்பை சிறப்பாக நடத்தியிருக்கிறாள். அதோடு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் இருக்கிறாள். காணாமல் போன பரமு-ரமேஷ் திரும்பக் கிடைப்பார்களா? என்று தேடத் தொடங்கியுள்ளனர்.

பிரசவம் நடக்கணுமே

பிரசவம் நடக்கணுமே

காமு, பரமு பிரசவம் நல்லமுறையில் நடைபெறுமா? மகா, பிரசாத்தை ஏற்றுக் கொள்வாளா?
மயில், தெய்வானை, மீனாட்சி மகேசுடன் இணைவார்களா? என்ற கேள்விகளுக்கும் இனிவரும் வாரங்களில் விடை காணலாம்

ரோகினியின் திருமணம்

ரோகினியின் திருமணம்

ரோகிணியின் தாய் மாமன் மகன் திருமணம் தடையின்றி நடைபெறுமா? ரோகிணியின் திருமணத்தால் ஒதுங்கிச் சென்ற ராஜேஷ் மீண்டும் வருவானா? ராகினியின் வாழ்வில் அடுத்த கட்டம் என்ன? பிரசாத் வருகையால் கோபி-மலர் உறவில் விரிசல் ஏற்படுமா? போன்ற பல பரபரப்புக் கேள்விகளுக்கும் விடை சொல்லும் என்கிறார், தொடரின்இயக்குனரும் தயாரிப்பாளருமான திருமுருகன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X