Kizhakku vaasal serial: நாகப்பனை சாகடிச்சாச்சு அடுத்து தேவராஜா? முடியலடா சாமி!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் வன்முறை தலை விரித்தாடுதுன்னு ஏற்கனவே சொல்லியாச்சு.இது தொடர்ந்துகொண்டே இருந்தால் அதை சொல்லிக்கொண்டே இருக்கத்தானே வேண்டி இருக்கு.
நாகப்பனை சந்தித்து, இனிமேலும் உன் வழியில் குறுக்கே வர மாட்டேன்.இருவரும் சேர்ந்து மக்களுக்கு நல்லதே செய்வோம். உன்னை என் உயிர் நண்பனாக இனி பார்க்கப் போகிறேன் நண்பான்னு சொல்லிக்கிட்டு, இரவு முழுக்கத் தூங்காமல் இதைப் பற்றியே கனவு கண்டுகொண்டு இருந்த தேவராஜ் கிளம்பறார்.
நாகப்பனை சந்த்தித்து,பேசி அவர் வீட்டில் உணவருந்த வேண்டும் என்கிற எண்ணத்தில், இதுவரை கெடுதல் செய்து வந்த தேவராஜ் கிளம்பி வர்றார். கூட வருகிறேன் என்று வந்த தனது மகனையும் வேண்டாம் என்று சொல்லி தனியே வர்றார்.

யாழினியும் தங்கையும்
நாகப்பனின் பெண்கள் இருவருக்கும் அன்று பிறந்த நாள்.அவர்கள் இருவருக்கும் அன்று உடலில் தேய்த்து குளிக்க கடலோரத்தில் இருக்கும் அம்மனின் பூஜை சந்தனத்தை பரிசாக கொண்டு வர்றேன்னு சொல்லிட்டு, கிளம்பறார் நாகப்பன் .இதைத் தெரிந்துகொண்ட தேவராஜின் வலது கையான ஆள் ராமு நாகப்பனை கொலை செய்யத் திட்டமிட்டு, நாடகமாடி அதே போல கத்தியால் சரமாரியாக வெட்டி போட்டுடறான். ரத்தம் சிந்த உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கார் நாகப்பன்.

யாழினி மகள்
நாகப்பனின் மகள் யாழினிக்கு ஏதோ தப்பாகத் தோன்ற, அப்பாவைத் தேடிப்போகிறாள். உயிருக்கு போர்த்திக்கொண்டு இருக்கும் அப்பாவை கண்ட யாழினி, அவரைத் தூக்கி ஜீப்பில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு அழுதுகொண்டே கிளம்பறா.அப்பாவுடன் பேசிக்கொண்டே அவரின் நினைவு தப்பாமலிருக்க கண்ணீர் விட்டு பேசறா. இருந்தாலும் மகளின் தோளில் சாய்ந்து உயிரை விட்டுடறார் நாகப்பன்.

உறவு நூல்
அப்பாவுக்கும் மகளுக்குமான பந்த நூல் சட்டென்று அறுந்து, இப்போது யாழினி அப்பா இல்லாத பெண்ணாகிவிட்டாள். இனி அம்மாவை எப்படி சமாதானம் செய்வது, தங்கையை எப்படி சமாளிப்பது என்று மனம் ஊமையாய் அழுகிறது. பிணமான அப்பாவை ஜீப்பில் தானே வீட்டுக்கு தூக்கி வருகிறாள் யாழினி. நாகப்பன் உயிரி போயிருக்கிறது என்றால் அதற்கு தேவ்ராஜைத் தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும்?

தேவராஜ் நாகப்பன்
இது தெரியாத தேவராஜ், நாகப்பனை கண்டு சமரசம் பேச அவரின் வீட்டுக்கு ஆனந்தத்துடன் வர, இதோ, நாகப்பன் பிணமாக கிடக்கிறார். அங்கு தேவராஜை கண்ட நாகப்பனின் மனைவிக்கு ஆத்திரம் வருது.எத்தனையோ கெடுதல்களை என் புருஷனுக்கும், அவரை சேர்ந்த மக்களுக்கும் செய்திருக்கே.அப்போது உன்னை கொன்றுவிட்டது துடித்த என் புருஷன் கைகளைக் கட்டிப்போட்டது நான்தான்.இப்போது என் வீட்டுக்கு வந்த உன் கால் உன் வீட்டுக்குத் திரும்பாதுன்னு சொல்லி, தேவராஜை கொன்று போடுங்கள் என்று ஆட்களை ஏவுகிறார்.
இப்படி ஒரே வன்முறை சீரியல்ங்க...கிழக்கு வாசல்.


Click it and Unblock the Notifications











