நாகப்பன் யாழினியை ஆண் பிள்ளை மாதிரி வளர்க்கிறாரே....சூப்பர்...!

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் நாகப்பன் தனது பெண் யாழினியை ஆண் பிள்ளை மாதிரி நினைச்சு தைரியமா பேசறது நல்லா இருக்கு.

தனது தரப்பு ஆளை தேவராஜ் மகன் கொன்னுடறான்... இது நாகப்பனுக்கு தெரிஞ்சு போகுது. இதனால் ரொம்பவும் மனசு உடைஞ்சு போயிடறார் நாகப்பன்.

கொலை செய்யப்பட்டவனின் மனைவி நாகப்பன் வீட்டு வாசலில் வந்து அழுது நிற்க, நாகப்பனுக்கு அதுவரைக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

தேவராஜின் செல்ல மகன்

தேவராஜின் செல்ல மகன்

தேவராஜின் செல்ல மகன் படித்து முடித்து வீட்டுக்கு வரும்போதே, தேவராஜ் அப்பாவை கூட இருந்தே கொலை செய்ய நினைச்சவனை, தலையை வெட்டிட்டு வந்துடறான் தேவராஜின் மகன். இது அப்பா தேவராஜுக்கே தெரியாது. வீட்டில் வந்து ஒண்ணும் தெரியாதவன் போல சாப்பிட்டு கொண்டு இருக்கான்.

நாகப்பனின் வீட்டு வாசலில்

நாகப்பனின் வீட்டு வாசலில்

நாகப்பன் வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்டவனின் மனைவி வந்து ஐயா ஐயான்னு அழறா. விசாரிச்சதில், ரெண்டு நாளா புருஷன் வீட்டுக்கே வரலைன்னு சொல்லி அழறா. நாகப்பனுக்கு அப்போதுதான் உண்மை தெரியுது. உடைஞ்சு போன அவர் மனசு சரி இல்லாமல் மகள் யாழினியை கூப்பிடறார்.

யாழினியிடம் சத்தியம்

யாழினியிடம் சத்தியம்

அம்மா யாழினி...நான் ஒண்ணு சொல்லுவேன் கேட்பியான்னு கேட்கறார் நாகப்பன். சொல்லுங்கப்பா கேட்கறேன்னு சொல்றா யாழினி. நாளைக்கே எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, என்னை நம்பி இருக்கும் இந்த மக்களை நீதான் என் ஸ்தானத்துல இருந்து பார்த்துக்கணும்னு சொல்றார். பார்த்துப்பேன்னு சத்தியம் செய்மான்னு கேட்கறார்.

நீங்களும் சத்தியம்

நீங்களும் சத்தியம்


அப்பா நான் சத்தியம் பண்றேன்...ஆனா, நீங்க எங்க கூட ஆயுசு முழுக்க நல்லபடியா வாழணும்ப்பா... மனசை தளர விடாம தைரியமா இருக்கணும்.. இனிமே இப்படி எல்லாம் மனசு உடைஞ்சு பேச மாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்து குடுங்கன்னு யாழினி கேட்கறா.

இருவரும் சத்தியம் செய்து கொள்கிறார்கள்.ஒரு பெண்ணை தைரியத்தில் ஆண் பிள்ளை மாதிரி வளர்ப்பதும், தன் பெண்ணை கலெக்டருக்கு படிக்க வச்சு அழகு பார்ப்பதும் ஒண்ணுதான்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X