கார்த்திக் மீது காதல் கொண்ட ஷிவன்யா... நாகினி... சன் டிவியில் மறு ஒளிபரப்பு

By Mayura Akilan

சென்னை: சன் டிவியில் இரவு நேரத்தில் 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நாகினி டிவி சீரியல் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இரவில் பாம்பை பார்க்காமல் தூங்கிவிடும் நேயர்களுக்காக அவர்களின் கோரிக்கையை ஏற்று இனி காலை நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. வரும் 25ம் தேதி திங்கட்கிழமை முதல் காலை 10.30 மணிக்கும் நாகினியை பார்க்கலாமாம்.

பேய் சீரியல்கள் சீசன் முடிந்து இப்போது டிவி சீரியல்களில் பாம்பு சீசன் ஆரம்பித்து விட்டது. பழிவாங்கும் பாம்புகள் பற்றிய கதைதான். நீயா படத்தில் பார்த்த கதைதான் என்றாலும் இதில் பெற்றோர்களை கொன்றவர்களை 20 ஆண்டுகள் கழித்து பழிவாங்க வரும் கதைதான் நாகினி.

இந்தி டிவியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற நாகின் என்ற தொடரின் டங்பிங் நாகினி. இது இச்சாதாரி பாம்பு மற்றும் அதன் சக்திகளை அடிப்படையாகக் கொண்டது. பழிவாங்க வந்த ஷிவன்யாக கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டது. இந்த தடுமாற்றம் ஏன்? நான் வந்த நோக்கம் என்ன என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு பழி வாங்க தயாராகிறாள் ஷிவன்யா.

இச்சாதாரி நாகங்கள்

இச்சாதாரி நாகங்கள்

சேஷா, ஷிவன்யா என்ற இருவரும் நினைத்த உருவத்திற்கு மாறும் இச்சாதாரி நாகங்கள் ஆவர். ஷிவன்யாவின் பெற்றோரை நாகமணியை அடைவதற்காக 5 நபர்கள் கொலை செய்து விடுகிறார்கள். ஷிவன்யா தன் தாய் இறக்கும் போது அவரது கண் மூலம் ஹரீஷ், விவேக், கைலாஷ் என்ற 3 கொலையாளிகளை அறிகிறார்.

காதல் வயப்படும் கார்த்திக்

காதல் வயப்படும் கார்த்திக்

அவர்களை பழிதீர்ப்பதற்காக ஹரீஷின் வீட்டில் ஷிவன்யா வேலைக்காரியாக நுழைகிறார். அங்கு ஹரீஷ்-யமுனா தம்பதியரின் மகனான கார்த்திக் ஷிவன்யாவின் மீது காதல் வயப்படுகிறார். சேஷா கார்த்திக்கை கொல்வதற்காக அவனை பள்ளத்தில் தள்ளி விடுகிறார். ஆனால் ஷிவன்யா அவரை காப்பாற்றுகிறார். மேலும் அப்பாவி மனிதர்களை கொல்வது தவறு என்கிறார்.

கொல்ல வரும் சேஷா

கொல்ல வரும் சேஷா

சேஷா ஹரீஷின் வீட்டிற்கு நடன மங்கையாக வருகிறார். ஹரீஷிற்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பண்டிதர் யமுனாவிடம் கார்த்திக்கின் ஜாதகத்தில் மரண தோஷம் இருப்பதால் 25 வயது முடிவதற்குள் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார்.

மரண தோஷம்

மரண தோஷம்

ஹீரோ கார்த்திக், தன் 25 வயதில் திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் பயப்படும் தாய் யமுனா மகன் கார்த்திக்கிற்கு அவரது சிறுவயது தோழியான சங்கவியை மணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆனால் கார்த்திக் தொடர்ந்து ஷிவன்யாவையே காதலித்து வருகிறார்.

மருதாணி விசேஷம்

மருதாணி விசேஷம்

கார்த்திக்கின் நிச்சயதார்த்ததை தன் பூர்விக அரண்மனையில் நடத்த நினைத்து தன் சொந்தங்களுடன் கிளம்ப வழியில் கார்த்திக்கு தான் இதற்கு முன்பு அந்த இடத்தை பார்த்த ஞாபகம் வருகிறது. மருதாணி விசேஷத்தில் கார்த்திக் அண்ணன் ஷிவானியை பலாத்காரமாக அடைய நினைக்க, இச்சாதாரி பாம்பான ஷிவன்யா அவரை தீண்டி கொல்லுகிறார்.

மணப்பெண்ணாக மாறிய ஷிவன்யா

மணப்பெண்ணாக மாறிய ஷிவன்யா

கார்த்திக் திருமணத்திற்கு முன்பு அவனது அம்மா போல உருமாறி மணப்பெண் சங்கவியிடம் சென்று கார்த்திக்கு தோஷம் இருப்பதாக கூறியும், சங்கவியாக மாறி கார்த்திக்கிடம் சென்று ஷிவன்யாவை நீ காதலிப்பது தெரியும் என்றும் அவரையே திருமணம் செய்து கொள்ள கூறி வெளியேறுவதாக கூறி மாறி மாறி உருமாறுவதும் சுவாரஸ்யம்.

ஷிவன்யா திருமணம்

ஷிவன்யா திருமணம்

சங்கவி ஓடிவிட்டதால் யமுனா ஷிவன்யாவை மணப்பெண்ணாக அமர்த்துகிறார். பௌர்ணமி இரவன்று அனைத்து இச்சாதாரி நாகங்களும் தம் நாக உருவத்திற்கு மாற வேண்டும். இதனால் ஷிவன்யாவும் நாகமாக மாற வேண்டிய நிலையில் இருந்தால். தன் சுயரூபம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று ஷிவன்யா ஈசனை வேண்டுகிறார்.

சிவன் அருள்

சிவன் அருள்

ஈசன் அருளியதால் நிலவை மேகங்கள் மறைக்க ஷிவன்யா பழைய நிலைக்கு பெண்ணாக மாறுகிறாள். கார்த்திக்-ஷிவன்யா திருமணம் நடந்து முடிந்தது. முதலிரவு சமயத்தில் ஷிவன்யாவின் உடல் மெதுவாக மாறத் தொடங்குகிறது.

பௌர்ணமி நடனம்

பௌர்ணமி நடனம்

பௌர்ணமி இரவன்று அனைத்து நாகங்களும் சிவனை வழிபட்டு தங்கள் சக்திகளை அதிகரித்துக் கொள்வர். அதுபோல் ஷிவன்யாவும் சிவன் கோவிலுக்குச் செல்வதற்காக கார்த்திகை மயக்கமடைய செய்கிறாள்.

காதல் கொண்ட ஷிவன்யா

காதல் கொண்ட ஷிவன்யா

சிவன் கோவிலில் சேஷாவும் ஷிவன்யாவும் சேர்ந்து நடனமாடுகின்றனர். பிறகு சக்திவாய்ந்த குரு ஒருவர் ஷிவன்யாவை தீர்க்கசுமங்கலியாக இருக்குமாறு ஆசீர்வதிக்கிறார். இதனால் ஷிவன்யா அதிர்ச்சி அடைகிறார். கொலை செய்ய வந்த ஷிவன்யா, கணவர் கார்த்திக் மீது மெல்ல மெல்ல காதல் கொள்கிறாள். கணவனை நெருங்குகிறாள். ஆனாலும் அவள் கொண்ட லட்சியம் தடுக்கிறது.

ஹரீசின் நண்பர்கள்

ஹரீசின் நண்பர்கள்

குருநாதர் ஷிவன்யாவிடம் நான்காவது கொலையாளிக்கு ஆறு விரல்கள் இருக்கும் என்கிறார். அந்த ஆறு விரல் உள்ள நபர் யார் என்று தேடுகிறாள் ஷிவன்யா. ஹரீஷின் நண்பர் சூர்யா தன் மனைவி மோனிஷாவுடன் ஹரீஷின் வீட்டிற்கு வருகிறார்.

காட்டி கொடுத்த 6 விரல்கள்

காட்டி கொடுத்த 6 விரல்கள்

சூர்யாவிற்கு 6 விரல்கள் இருக்கிறது என்று ஷிவன்யாவிடம் தோழி கூறவே அதை உறுதிப்படுத்த முயற்சி செய்கிறாள். தீர்த்தம் கொடுக்கும் போது சூர்யாவின் கைகளைப் பார்க்க அதில் 6 விரல்கள் இல்லை. ஆனால் மனைவியின் புடவையில் தீ பிடித்ததை அணைக்க சூர்யா முயற்சி செய்த போது அவனது கைகளில் ஆறு விரல்கள் இருப்பதை பார்த்துவிடுகிறார்.

லட்சியம் நிறைவேறுமா?

லட்சியம் நிறைவேறுமா?

சூர்யாவை உடனே கொலை செய் என்று ஷிவன்யாவிடம் கூறுகிறாள் சேஷா. ஆனால் ஒரு அப்பாவியை கொலை செய்யக் கூடாது என்று கூறி ஷிவன்யா மறுத்து விடுகிறாள். சூர்யாவை கொன்றே தீர வேண்டும் என்று அதற்கான வழியை தேடுகிறாள் சேஷா. ஷிவன்யாவும், ஷேசாவும் கொண்ட லட்சியம் நிறைவேறுமா? பார்க்கலாம்.

மறு ஒளிபரப்பு

நாகங்களைப் பற்றிய கதை சுவாரஸ்யமாகவே போகிறது. கார்த்திக் தாய் யமுனாவாக சுதாசந்திரன் நடித்திருக்கிறார். அழகான உடைகள்... ஆடம்பரமான பங்களா, மேக் அப் என்று டப்பிங் சீரியல்கள் தமிழக ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாம்பு கதை என்பதால் சிறுவர்களும் சுவாரஸ்யமாக பார்ப்பதால் காலை நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்கிறது சன் டிவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X