தூக்கி வாரிக் கட்டிய கொண்டை.. பார்த்ததும் பரவசமான ரசிகர்கள்!

சென்னை : முகத்தைக் காட்டாமல் முன்னழகு பின்னழகு போட்டோ வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் நக்ஷத்ரா.

எந்த எக்ஸ்ட்ரா அழகும் தேவை இல்லை என தலை கூட சீவாமல் இப்படி வந்து இருக்கீங்களே என்று அசந்து போய் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

அழகுக்கு அழகு எதற்கு மேக்கப்பே இல்லாமல் நட்சத்திரம் போல ஜொலிப்பாங்கய்யா எங்க நக்ஷத்ரா என்றும் சிலர் கமெண்ட்டுகளில் உருட்டிக் கொண்டுள்ளனர்.

மோகினி

மோகினி

ஜீ தமிழில் ஒரு ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த நக்ஷத்திராவிருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது .இவர் தன்னை மோகன்லால் பைத்தியம் என்று செல்லமாக சொல்லிக் கொள்வதுண்டு. முதன் முதலாக தமிழில் சீரியலில் அறிமுகமாகி இருந்தாலும் வந்தாரை வாழவைக்கும் பூமி இந்த கேரளத்து கதகளிக்கும் ஆதரவு கொடுத்து தூக்கி விட்டுள்ளது.

சினிமாவிலும்

சினிமாவிலும்

இவர் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்னரே கிடா பூசாரி மகுடி என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அவர் நினைத்த வரவேற்பை கொடுக்காததால் சீரியலை தனது திறமையை நிரூபிக்கும் இடமாக மாற்றிக் கொண்டார் .அதனால் சீரியலின் கேரக்டராகவே மாறி விட்டார். ஆனால் உண்மையில் இவர் துருதுருவென அனைவரையும் கலாய்த்து பாடாய் படுத்தி எடுத்துவிடுவாராம்.

அப்பிராணி வெண்ணிலா

அப்பிராணி வெண்ணிலா

சீரியலில் வெண்ணிலா கேரக்டரில் அப்பிராணியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவருடன் ஸ்வேதாவாக நடிக்கும் சைத்ரா ரெட்டியும் இவரும் நெருங்கிய தோழிகள் .ஆனால் கேமராவுக்கு முன்னாடி வந்ததும் இவர்கள் இருவரும் கதாநாயகியாகவும் வில்லியாகவும் மாறிவிடுகின்றனர் .ஆனால் கேமராவிற்கு பின்பு நக்ஷத்ரா தான் வில்லியாக இருந்து அனைவரையும் பாடாய் படுத்தி வருகிறார் என்று அவருடைய தோழிகள் கூறியிருக்கின்றனர்.

பேன்ஸ் அதிகம்

பேன்ஸ் அதிகம்

இவருக்கு சீரியலில் மட்டுமல்லாமல் சீரியலை தாண்டியும் சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர் .அதனால்தான் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் .இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ அப்லோட் செய்ததும் அவருடைய ரசிகர்கள் கவிதைகளை கமெண்டுகளாய் கொட்ட தொடங்கிவிடுகின்றனர்.

சாதாரண நைட்டியில்

சாதாரண நைட்டியில்

அதேபோலதான் தற்போது சிம்பிளாக உடை அணிந்து எந்த மேக்கப்பும் இல்லாமல் இவர் ஒரு போட்டோ வெளியிட அதை பார்த்ததும் அசந்து போன அவருடைய ரசிகர்கள் கமெண்ட்களில் இன்ஸ்டாகிராமை கலங்கடித்து வருகின்றனர் .அதிலும் ஒரு கவிஞர் கவிதையை வடித்திருக்கிறார். அதில் மண்ணில் பிறந்த வானத்து நட்சத்திரமே..முத்தை மட்டும் ஏன் கன்னத்தில் கொண்டிருக்கிறாய்!! (முகப்பரு) அழகி ..என்று கொஞ்சி இருக்கிறார்.

ரொம்ப க்யூட்டுங்க

ரொம்ப க்யூட்டுங்க

அதுமட்டுமல்லாமல் இந்த மாதிரி ஆயில் ஹேர் ஸ்டைல் எப்படி பண்ணுவது என்று சொல்லி தாருங்கள் என்றும் சிலர் கேட்டு வருகின்றனர். அதுவும் இல்லாமல் தூங்கி முழித்ததும் தூக்கக் கலக்கத்தோடு போட்டோ எடுத்து போஸ்ட் போட்டு விட்டீர்களா அதான் முகத்தை காட்டாம அந்தப்பக்கமா பாத்தீங்களா என சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X