நக்ஷத்ராவின் தலை பொங்கல் கொண்டாட்டம்... இன்ஸ்டாகிராமில் குஷி பதிவு

சென்னை : டிவி தொகுப்பாளர், சீரியல் நடிகை என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் நக்ஷத்ரா நாகேஷ்.

இவருக்கும் சமீபத்தில் ராகவ் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய தலைப்பொங்கல் கொண்டாட்டம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

டிவி நடிகை நக்ஷத்ரா நாகேஷ்

டிவி நடிகை நக்ஷத்ரா நாகேஷ்

டிவி தொகுப்பாளர், நடிகை என பன்முகத் திறமையுடன் வலம்வந்தவர் நக்ஷத்ரா நாகேஷ். சீரியலிலும் குறும்படங்களிலும் இவருடைய நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. மேலும் சன்டிவியின் நிகழ்ச்சிகளிலும் இவர் அதிகமாக காணப்பட்டார்.

சிறப்பான டிவி நடிகை

சிறப்பான டிவி நடிகை

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இவரது சீரியல்களுக்கு காணப்பட்டது. குறிப்பாக குஷ்புவின் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியரில் இவரது கேரக்டர் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் இவரும் ஹீரோவும் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரங்கள் ரொமான்ஸை சிறப்பாக வெளிப்படுத்தின.

கடந்த மாதத்தில் திருமணம்

கடந்த மாதத்தில் திருமணம்

தொடர்ந்து சிறப்பாக நடித்துவந்த நக்ஷத்ரா கடந்த மாதத்தில் திருமணம் செய்துள்ளா. ராகவ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

தொடர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் பதிவு செய்த நக்ஷத்ரா, தங்களின் முதல் மாத கொண்டாட்டத்திற்கான பதிவையும் செய்தார். தொடர்ந்து தன்னுடைய மாமியாருடன் இணைந்து குத்துப் பாட்டிற்கும் ஆட்டம் போட்டார்.

தலைப்பொங்கல் கொண்டாட்டம்

தலைப்பொங்கல் கொண்டாட்டம்

இந்நிலையில், தற்போது தன்னுடைய தலைப்பொங்கல் குறித்த பதிவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவரும் அவருடைய கணவரும் சந்தோஷத்துடன் அணைத்தபடி காணப்படுகின்றனர். தலை பொங்கலையொட்டி தன்னுடைய சகோதரி அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்னதாக தனக்கு நலங்கு வைத்துவிட்டு சென்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

கொண்டாட்ட புகைப்படங்கள்

கொண்டாட்ட புகைப்படங்கள்

இதற்கான புகைப்படத்தை எடுத்த வினோ பிரான்சிஸ் ராய்க்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். 15 நிமிடங்களில் தங்களின் அழகான நினைவுகளை அவர் பதிவு செய்ததாகவும் நக்ஷத்ரா குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் அள்ளுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X